முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெறும் தேங்காய் - சர்க்கரை இருந்தா போதும் சூப்பரான இனிப்பு பூரி செய்யலாம்.!

வெறும் தேங்காய் - சர்க்கரை இருந்தா போதும் சூப்பரான இனிப்பு பூரி செய்யலாம்.!

puri recipe

puri recipe

உங்க குழந்தைகைக்கு இப்படி பூரி செஞ்சு கொடுங்க… மிச்சம் வைக்காம சாப்பிடும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பூரி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பூரிக்கு மேலும் சுவை கூட்டும் விதமாக, சர்க்கரை - தேங்காய் சேர்த்து ஒரு வித்தியாசமான சுவையில்இனிப்பு பூரி சுடுவது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்.

ஏலக்காய் - 3.

சர்க்கரை - 1 கப்.

ரவை - 1 கப்.

தேங்காய் - அரை மூடி.

எண்ணெய் - தேவையான அளவு.

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

> பூரி செய்வதற்கு முன் அரை மூடி தேங்காயை நன்கு துருவி தனி பாத்திரத்தில் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதே சமயம், ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

> தற்போது மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி சுடும் பதத்திற்கு மாவை பிசைந்துக்கொள்ளவும்.

> பின்னர், ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் ரவை சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். இதை தொடர்ந்து, அதில் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

> ஏற்கனவே, பூரி பதத்திற்கு பிசைந்து வைத்த கோதுமை மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, அந்த உருண்டைக்குள் நாம் தயார் செய்து வைத்த சர்க்கரை - தேங்காய் கலவையினை சேர்த்து தனியே எடுத்துக்கொள்ளவும்.

> இந்த உருண்டைகளை பூரி சுடுவதற்கு ஏற்ற வகையில் தட்டையாக உருட்டிக்கொள்ளவும். மாவு உருண்டையில் வைத்த சர்க்கரை - தேங்காய் கலவை வெளியே வராத வகையில் உருட்டிக்கொள்வது நல்லது. பின்னர், அவற்றை வட்டமனாக தேய்க்கவும்.

> தற்போது பூரி சுட்டு எடுக்க, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும், இதில் உருட்டி தயாராக வைத்துள்ள பூரி மாவினை சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான இனிப்பு பூரி ரெடி.

> இந்த இனிப்பு பூரியை, அப்படியே ஒரு தட்டில் வைத்தும் பரிமாறலாம். தேவைப்பட்டால் பூரியுடன், தக்காளி சாஸ் அல்லது உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு சாஸ் சேர்த்து பரிமாறலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

First published:

Tags: Coconut, Food recipes, Sweet recipes