முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பிளாக் காஃபியை விட பால் சேர்த்த காஃபிதான் உடலுக்கு நல்லதா..?

பிளாக் காஃபியை விட பால் சேர்த்த காஃபிதான் உடலுக்கு நல்லதா..?

காஃபி

காஃபி

நாம் காஃபியுடன் பால் சேர்த்து அருந்தும்போது, நம் உடலுக்கு மிகுதியான புரதச்சத்து கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கம, கமவென்ற மனத்துடன், ஆவி பறக்கின்ற காஃபி அருந்துவது எல்லோருக்கும் பிடிக்கும். பலர் இனிமையான காலைப் பொழுதை இத்தகைய காஃபியுடன் தொடங்குகின்றனர். அன்றைய நாள் முழுவதுக்குமான ஆற்றலை இந்த காஃபி தருகிறது. காஃபி அருந்திய வேகத்தில் வேலைகள் அனைத்தையும் துரிதமாக செய்து முடிக்கிறோம்.

காஃபியை எப்படி அருந்துவது என்பது ஒவ்வொருவரின் விருப்பம் சார்ந்ததாக இருக்கிறது. சிலர் பிளாக் காஃபி அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். சிலர், பாலுடன் காஃபி தூள் சேர்த்து அருந்துவதை விரும்புகின்றனர். இருப்பினும், பாலுடன் சேர்த்து காஃபி அருந்தும்போது நமக்கான பலன்கள் அதிகம். அழற்சிக்கு எதிரான ஆற்றலும் கிடைக்கிறது.

அழற்சி என்றால் என்ன?

பாக்டீரியா, வைரஸ் அல்லது வேறு ஏதேனும் பொருள் வெளியில் இருந்து உடலுக்குள் வரும்போது, அதற்கு உடல் காட்டும் எதிர்வினை தான் அழற்சி என்பதாகும். நம்மை பாதுகாப்பதற்காக வெள்ளை நிற அணுக்கள் மற்றும் ரசாயன பொருட்களை நமது நோய் எதிர்ப்பு சக்தி அனுப்பி வைக்கும்.

பாலிஃபினால்ஸ் என்ற ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் மனிதர்கள், தாவரங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் என அனைத்திலும் உள்ளது. இதுதான், உணவு நஞ்சாக மாறுவதை தடுத்து, தரமாக வைத்துக் கொள்கிறது. இந்த பாலிஃபினால்ஸ் மனிதர்களின் உடலில் அழற்சி ஏற்படக் காரணமான ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைக்கிறது.

உடலில் பாலிஃபினால்ஸ், அமினோ அமிலத்துடன் இணையும்போது, நோய் எதிர்ப்பு சக்தி செல்களில் அழற்சி நடவடிக்கை தடுக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆக, நாம் பால், பீர் மற்றும் இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது, பாலிஃபினால்ஸ் மற்றும் அமினோ அமிலங்கள் இணைந்து புரதமாக மாறுகிறது.

ஆக, நாம் காஃபியுடன் பால் சேர்த்து அருந்தும்போது, நம் உடலுக்கு மிகுதியான புரதச்சத்து கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. காஃபி மட்டுமல்லாமல் நம் உடலில் அழற்சியை எதிர்கொள்ள வேறு சில உணவுகளும் உதவிகரமாக இருக்கும்.

அழற்சியை எதிர்கொள்வதற்கான உணவுகள் : 

பெர்ரி வகை பழங்கள் அனைத்துமே அழற்சிக்கு எதிரான பண்புகளை கொண்டிருந்தாலும் நாவல் பழம் சாப்பிடுவது மிகுதியான பலன்களை தரும். அத்துடன் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும். சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொண்டால் புரதச்சத்து, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் சத்துக்கள் கிடைப்பதுடன் அழற்சியை எதிர்கொள்ள உதவும்.

Also Read : டீ பிரியர்கள் மத்தியில் ட்ரெண்டாக இருக்கும் ப்ளூ டீ - எப்படி தயாரிப்பது... ஆரோக்கிய நன்மைகள் என்ன?

காய்கறி வகைகளில் ஃப்ரோகோலி, அவகோடா, ஊட்டி மிளகாய், காளான் போன்றவற்றில் அழற்சிக்கு எதிரான பண்புகள் உள்ளன. தமிழர்களின் பாரம்பரியத்தில் முக்கிய இடம்பிடித்துள்ள மஞ்சள் அழற்சிக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது. பாலில் காஃபி கலந்து அருந்த விரும்பாதவர்கள் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து பருகினால் அழற்சியை விரட்டியடிக்கலாம்.

First published:

Tags: Black coffee, Coffee, Health tips