உருளைக்கிழங்கு உட்கொள்வது இளம்பருவத்தில் உள்ளவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க உதவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கு நிறைந்த உணவு உங்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை பார்க்கலாம்.
நீங்கள் உருளைக்கிழங்கு பிரியராக இருந்தால், இதோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. 9 முதல் 18 வயதுடையவர்களிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் உருளைக்கிழங்கு சாப்பிடுவது முக்கிய
ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதை மிதமாக மேம்படுத்த ஒரு சிறந்த உத்தியாக செயல்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது.
ஆய்வின் விவரங்கள்:
9 முதல் 18 வயது வரையிலான தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து தேர்வு கணக்கெடுப்பில் (NHANES) 2001-2018ல் பங்கேற்ற உணவு தகவல்களைச் சேகரித்தனர். பல ஊட்டச்சத்துக்களுக்கு, உருளைக்கிழங்கு நுகர்வு அதிகரிப்பதன் மூலம் உட்கொள்ளல் மற்றும் போதுமான அளவு மேம்பட்டது என்பதை கண்டறிந்தனர்.
முடிவுகள்:
உருளைக்கிழங்கு சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில், உணவின் ஒரு பகுதியாக வேகவைத்த அல்லது பிசைந்த உருளைக்கிழங்கை உட்கொண்டவர்களில் HEI மதிப்பெண்கள் 4.7 சதவீதம் அதிகம்.
ஃப்ரைடு உருளைக்கிழங்கு அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்ட இளம் பருவத்தினரிடையே உருளைக்கிழங்கை உணவில் சேர்க்காதவர்களை விட HEI மதிப்பெண்கள் முறையே 2 சதவீதம் மற்றும் 1.6 சதவீதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
Must Read | இந்த நாள் இனிய நாளா அமையணுமா? ஃபாலோ பண்ண வேண்டிய 5 விஷயங்கள்..!
உருளைக்கிழங்கு நுகர்வுடன் ஒப்பிடுகையில், உருளைக்கிழங்கை எந்த வடிவத்திலும் சாப்பிடுவது (சுட்ட, வேகவைத்த, பிசைந்த மற்றும் வறுத்த) உடலில் நார் மற்றும் பொட்டாசியம் உட்பட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் அதிக உட்கொள்ளலுடன் தொடர்புடையது என்று முடிவுகள் காட்டுகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.