• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • "Time-Restricted Eating" உணவு முறையால் ஏற்படும் நன்மைகள்: ஆய்வில் மூலம் கண்டறியப்பட்ட உண்மை!

"Time-Restricted Eating" உணவு முறையால் ஏற்படும் நன்மைகள்: ஆய்வில் மூலம் கண்டறியப்பட்ட உண்மை!

"Time-Restricted Eating" உணவு முறை நன்மைகள்

"Time-Restricted Eating" உணவு முறை நன்மைகள்

சமீபத்தில் சால்க் விஞ்ஞானிகள் நடத்திய ஒரு புதிய ஆய்வில், time-restricted eating (TRE), அதாவது குறிப்பிட்ட நேரத்திற்கு உணவை கட்டுப்படுத்தும் உணவு முறை, எடை இழப்பு தவிர பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

  • Share this:
சமீபத்தில் சால்க் விஞ்ஞானிகள் நடத்திய ஒரு புதிய ஆய்வில், time-restricted eating (TRE), அதாவது குறிப்பிட்ட நேரத்திற்கு உணவை கட்டுப்படுத்தும் உணவு முறை, எடை இழப்பு தவிர பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த நன்மைகள் பாலினம் மற்றும் வயதைப் பொறுத்தது என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம் ஆண் எலிகளில் நடத்தப்படும் பெரும்பாலான TRE ஆய்வுகள் எடை இழப்பில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் TRE உணவு முறை எடை இழப்பு தவிர கூடுதல் நன்மைகளை அளிக்கிறதா என்பதை சால்க் விஞ்ஞானிகள் தீர்மானிக்க விரும்பினர். இதையடுத்து அது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டனர். ஆய்வின் கண்டுபிடிப்புகள் 'செல் அறிக்கைகள்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

அவர்களின் கண்டுபிடிப்புகளின்படி, வயது மற்றும் பாலினம் பொறுத்து TRE உணவு முறையின் விளைவுகள் அமையும் என்றும் அதே வேளையில், இந்த உணவு முறை ஆண், பெண் என இரண்டு பாலின இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் டைப் 2 நீரிழிவு, கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு எதிராக TRE உணவுமுறை ஒரு மதிப்புமிக்க தலையீடாக இருக்கலாம் என்று ஆய்வு சுடுகாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாது மனிதர்களில் COVID-19 போன்ற தொற்று நோய் பரவாமல் தடுக்க உதவுகிறது.

ALSO READ |  ஆப்கனுக்கு உக்ரைன் மக்களை மீட்கச் சென்ற பயணிகள் விமானம் ஈரானுக்கு கடத்தல்!

இது குறித்து சால்க் ரெகுலேட்டரி பேராசிரியர் சச்சிதானந்த பாண்டா கூறியதாவது, " TRE உணவுமுறையின் முதன்மை விளைவு எடை இழப்பு ஆகும். ஆனால் TRE வளர்சிதை மாற்ற நோய்க்கு எதிராக மட்டுமல்ல, தொற்று நோய்கள் மற்றும் இன்சுலின் எதிர்ப்புக்கு எதிரான அதிகரித்த நெகிழ்ச்சிக்கு நல்லது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

குளுக்கோஸ் சகிப்புத்தன்மை என்பது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான முதல் படியாகும். கடந்த 25-30 ஆண்டுகளில் இந்த நோய்களின் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், 40 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் ஏற்கனவே நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நீரிழிவு சங்கம் ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் புதிய பாதிப்புகளை பாதிவு செய்து வருவதாக கூறியுள்ளது. இந்த போக்குகள் குளுக்கோஸ் சகிப்புத்தன்மைக்கு ஒரு எளிய சிகிச்சையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை முக்கிய முன்னுரிமையாக மாற்றியுள்ளது.

ALSO READ | தாலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் பஞ்ஷிர் நாயகன் சரண் அடைகிறாரா?

ஆய்வுக்குக்காக ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வயது பிரிவுகளை கொண்ட (20 மற்றும் 42 வயதுடைய மனிதர்களுக்கு சமமான எலிகள்) ஆண் மற்றும் பெண் எலிகளுக்கு அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை உணவை அளித்தனர். பின்னர் ஒன்பது மணி நேரத்திற்கு உணவை கட்டுப்படுத்தினர். வயது மற்றும் பாலினம் அடிப்படையில், கொழுப்பு கல்லீரல் நோய்; குளுக்கோஸ் கட்டுப்பாடு; தசை நிறை, செயல்திறன் மற்றும் சகிப்புத்தன்மை; செப்சிஸ்; உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு சுகாதார அளவுருக்களில் TRE இன் விளைவுகள் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறிய குழு சில சோதனைகளை நடத்தியது.

அவர்கள் தங்கள் ஆய்வக நிலைமைகளை விலங்குகளின் சர்க்காடியன் கடிகாரங்களுடன் (பகலில் தூங்குவது மற்றும் இரவில் எழுவது) பொருந்தும் அரிய நடவடிக்கையை மேற்கொண்டனர். பெரும்பாலும் இரவில் நடப்பதை பதிவு செய்ய கண்ணாடிகள் மற்றும் சிறப்பு விளக்குகள் மூலம் கண்காணித்தனர். TRE இல் எலிகளின் திசுக்களை ஆராய்ந்து அவற்றின் இரசாயன அமைப்பு மற்றும் செயல்முறைகளை அறிய நடத்திய சோதனையில், வயது, பாலினம் அல்லது எடை இழப்பு ஆகியவற்றை பொருட்படுத்தாமல், கொழுப்பு கல்லீரல் நோயிலிருந்து TRE வலுவாக பாதுகாக்கப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பொதுவாக இந்த நோய் 100 மில்லியன் அமெரிக்கர்களை பாதிக்கிறது.

ALSO READ | தலிபான்கள் பெண்களை மிகவும் கொடுமைப்படுத்துவார்கள் - ஆப்கன் முதல் பெண் விமானி எச்சரிக்கை!

இது தொடர்பாக பாண்டா ஆய்வகத்தில் முன்னாள் ஊழியர் விஞ்ஞானியும் இப்போது உட்டா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியருமான முதல் எழுத்தாளர் அமண்டின் சாய்க்ஸ் கூறுகையில், "பெண் எலிகள் குறித்த ஆய்வினை படிப்பது இதுவே எங்களுக்கு முதல் முறை. TRE உணவுமுறையில் உள்ள பெண் எலிகள் எடை அதிகரிப்பிலிருந்து பாதுகாக்கப்படவில்லை என்றாலும், குறைந்த கொழுப்பு கல்லீரல் மற்றும் சிறந்த கட்டுப்பாட்டு இரத்த சர்க்கரை உள்ளிட்ட வளர்சிதை மாற்ற நன்மைகளை பெற்றுள்ளது என்பதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம்" என்று கூறினார்.

இந்த TRE உணவுமுறையில் 16 மணிநேர உண்ணாவிரதத்திற்குப் பிறகு எலிகளுக்கு கொடுக்கப்பட்ட ஓரல் குளுக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனைகள் TRE ஆனது இரத்த குளுக்கோஸின் குறைந்த அதிகரிப்பு மற்றும் இளம் மற்றும் நடுத்தர வயது ஆண்கள் இருவருக்கும் சாதாரண இரத்த சர்க்கரையின் அளவை விரைவாக மீட்டெடுப்பதோடு தொடர்புடையது என்பதைக் குறிக்கிறது. இதேபோல், TRE இல் உள்ள நடுத்தர வயதுடைய பெண்களும் ஆண்களும் எல்லா நேரங்களிலும் உணவு கிடைக்கக்கூடிய கட்டுப்பாட்டு எலிகளைக் காட்டிலும் சாதாரண இரத்த சர்க்கரை அளவை மிகவும் திறமையாக மீட்டெடுக்க முடிந்தது.

ALSO READ |  தாலிபான்களிடமிருந்து தாலிபான்களுக்கு- அமெரிக்காவின் லட்சணம் இதுதான் - சீனா கடும் கேலி

இந்த கண்டுபிடிப்பு, நீரிழிவு நோயைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க TRE ஒரு குறைந்த அல்லது செலவு இல்லாத, நட்பு வழி மருத்துவம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மனிதர்களில் வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கு TRE பற்றிய ஆய்வகத்தின் 2019 ஆய்வின் முடிவுகளையும் ஐந்து ஆராய்ச்சி ஆதரிக்கிறது. செப்சிஸ் தூண்டப்பட்ட இறப்பிலிருந்து TRE ஆண் மற்றும் பெண் இருவரையும் பாதுகாக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எலிகளில் செப்சிஸ் போன்ற நிலையை உண்டாக்கும் ஒரு நச்சுப்பொருளை நிர்வகித்த பிறகு, அவற்றின் உயிர்வாழும் விகிதங்களை 13 நாட்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர். அதன் மூலம் TRE உணவுமுறை ஆண் மற்றும் பெண் எலிகள் இரண்டையும் செப்சிஸ் பாதிப்பால் ஏற்படும் இறப்பில் இருந்து பாதுகாக்கின்றன.தெளிவாக சொல்ல வேண்டுமானால் கொழுப்பு கல்லீரல் நோய், நீரிழிவு மற்றும் செப்சிஸ் இறப்பிலிருந்து TRE உணவுமுறை நேரடியாக பாதுகாக்காது. இது ஆண் எலிகளில் தசை வெகுஜனத்தைப் பாதுகாக்கவும், வலு சேர்க்கவும் மற்றும் தசை செயல்திறனை மேம்படுத்தவும் உதவியது (இந்த விளைவுகள் பெண்களுக்கு பொருந்தாது). இதன் காரணமாக ஆண் எலிகள் மேற்கண்ட நோயை எதிர்த்து போராடின. இந்த கண்டுபிடிப்பு முதியவர்களுக்கு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது. மேம்பட்ட தசை செயல்திறன் வீழ்ச்சியிலிருந்து அவர்களை பாதுகாக்க இந்த TRE உணவுமுறை உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: