மூளையில் ரத்த ஓட்டம் தடைபடுவது மூளை பாதிப்புகள் மற்றும் பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கலாம். இந்த நிலைமைகள் மருத்துவ அவசரநிலையாகும் மற்றும் மருத்துவ கவனிப்பில் ஏற்படும் தாமதம் மரணத்தை விளைவிக்கும். எனவே உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள் இந்த சிக்கலுக்கு எதிராக தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் நிலைமைகளால் பாதிப்பட்ட வரலாற்றைக் கொண்ட சுமார் 21,000 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, சால்ட் சப்ஸ்டிட்டியூட்ஸ் (salt substitutes) அதாவது உப்புக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை சுமார் 14 சதவிகிதம் வரை குறைக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
salt substitutes என்பது குறைந்த சோடியம் உப்பு என்றும் அழைக்கப்படும் சாதாரண மற்றும் சோடியம் அதிகம் காணப்படும் டேபிள் சால்ட்டுக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு வரும் உப்பு ஆகும். இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை தவிர்க்க உதவ கூடியது. இந்நிலையில் சமீபத்திய ஆய்வு ஒன்றில் தான் salt substitutes-களை பயன்படுத்துவதன் மூலம் மாரடைப்புக்கான ஆபத்து 13 சதவீதம் வரையிலும், அகால மரணம் ஏற்படும் அபாயம் 12 சதவீதம் வரையிலும் குறைவதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்( The New England Journal of Medicine) இதழில், "இதய நிகழ்வுகள் மற்றும் மரணத்தில் உப்பு மாற்றீடுகளின் விளைவு" (Effect of Salt Substitution on Cardiovascular Events and Death) என்ற தலைப்பில் வெளியானது.
ஆராய்ச்சியாளர்கள் நாம் ஏற்கனவே கூறியபடி சுமார் 21,000 பேரை ஆய்வுக்குட்படுத்தினர். இந்த ஆய்வில் பங்கேற்ற 21,000 பேரில் பாதி பேர் வீட்டில் தங்கள் உணவு தயாரிப்பில் வழக்கமான உப்பை (சோடியம் குளோரைடு) பயன்படுத்தவும், மீதி பாதி பேர் 75% சோடியம் குளோரைடு மற்றும் 25% பொட்டாசியம் குளோரைடு அடங்கிய salt substitutes பயன்படுத்தவும் வைக்கப்பட்டனர். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, சாதாரண உப்பைப் பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும் போது, salt substitutes-களை பயன்படுத்தியவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 14% குறைவு, மாரடைப்பு ஆபத்து 13% குறைவு மற்றும் ஆரம்பகால மரணம் 12% குறைவு என்பது கண்டறியப்பட்டது.
https://twitter.com/HarvardHealth/status/1491819492896387082
நமது உணவில் உள்ள நாம் உட்கொள்ளும் சோடியத்தின் பெரும்பகுதி சோடியம் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து தான் வருகிறது. அந்த உணவுகளை குறைப்பதைத் தவிர சாதாரண உப்பிற்குப் பதிலாக உப்பு மாற்றீடுகளை பயன்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தி இருக்கிறது. ஹார்வர்ட் ஹெல்த் (Harvard Health) இந்த ஆய்வு முடிவை பற்றிய ட்விட்டில் “சாதாரண உப்பைப் பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது, உணவில் உப்பு மாற்றீடுகளை பயன்படுத்துபவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு மற்றும் சராசரி வயதுக்கு முன் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளிட்டவை குறைவு என்று ஒரு பெரிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வின் முடிவு தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினால் வெளியிடப்பட்டது" என்று கூறி இருக்கிறது.
பக்கவாத அபாயத்தைக் குறைப்பதற்கான டிப்ஸ் :
* ரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது பக்கவாதத்தைத் தடுப்பதற்கான முதல் படி
* ஐஸ்கிரீம், பிரஞ்சு ஃபிரைஸ் , கேக்குகள் போன்ற நிறைவுற்ற கொழுப்புகளின் நுகர்வு தவிர்க்கப்பட வேண்டும்
* புகைப்பழக்கம் மற்றும் மதுபழக்கத்தை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்
* தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வொர்கவுட் செய்வது அவசியம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Iodine Salt, Pink salt, Salt