• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வீக் எண்ட் ஸ்பெஷல் ரெசிபி… சூப்பர் சாஃப்ட் பான் கேக் செய்ய ஸ்டெப்ஸ்!

வீக் எண்ட் ஸ்பெஷல் ரெசிபி… சூப்பர் சாஃப்ட் பான் கேக் செய்ய ஸ்டெப்ஸ்!

பான் கேக் செய்ய நீங்கள் பயன்படுத்தும் பாத்திரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அடி கனமான பாத்திரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

  • Share this:
தற்போது பெரும்பாலானோர் தங்கள் காலை உணவில் பான் கேக்கை சாப்பிட விரும்புகிறார்கள். பொதுவாக இந்த பான் கேக்கை எளிதாக செய்து விடலாம். கோதுமை மாவு அல்லது மைதா மாவு, முட்டை, வெல்லம் அல்லது சர்க்கரை போன்ற எளிமையான உணவு பொருட்கள் மட்டுமே இந்த கேக் செய்ய தேவைப்படுகிறது. பொதுவாக அனைவரது வீட்டிலும் வெவ்வேறு முறைகள் பின்பற்றப்படுகிறது. ஆனால் நீங்கள் இதில் சில மாற்றங்களை செய்தால் உங்கள் பான் கேக் கூடுதல் ருசியாக இருக்கும். அதற்கான 3 எளிய டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம். இந்த 3 எளிய உதவிக்குறிப்புகளை பின்பற்றி பஞ்சு போன்ற சுவையான பான் கேக்கை தயாரிக்கவும்.

பால் மற்றும் வினிகரை தவிர்த்து விடுங்கள்:

பான் கேக்கின் சீரான தன்மை மற்றும் சுவையை நீங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றால் பால் மற்றும் வினிகரை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக மோர் சேர்க்கலாம். மோர் பான் கேக்கிற்கு மென்மையான தன்மையை கொடுக்கும். பால் சேர்த்தால் அதில் இருக்கும் புரதங்கள் உங்கள் கேக்கை கடினமாக்கும். எனவே மோர் சேர்ப்பது நல்லது. எனினும் மோர் சேர்த்து கலக்கும் போது கட்டிகள் வந்தால் கலப்பதை நிறுத்துங்கள். பின்னர் அவற்றை நன்கு கரைத்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பாத்திரத்தில் கவனம்:

பான் கேக் செய்ய நீங்கள் பயன்படுத்தும் பாத்திரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அடி கனமான பாத்திரத்தை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். வெறும் பாத்திரத்தில் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள கலவையை ஊற்றினால் அது சரியாக வராது. எனவே அந்த பாத்திரத்தில் எண்ணெய் அல்லது முட்டைகளைப் பயன்படுத்தி ஹைட்ரேட் செய்யுங்கள். நீங்கள் தயார் செய்துள்ள கலவை கெட்டியாக இருந்தால், இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். இப்போது எண்ணெய் அல்லது முட்டை சேர்த்துவிட்டு உங்கள் கலவையை பாத்திரத்தில் ஊற்றவும், மேலும் நீங்கள் அதனை புரட்டவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதில் குமிழ்கள் தோன்றிய பின்னர் திருப்பி போடவும். பான்கேக் கடாயில் திருப்ப முடியாமல் ஒட்டிக்கொண்டிருந்தால், சற்று நேரம் காத்திருக்கவும்.

Must Read | வீட்டிலிருந்தபடியே சுவாசப் பிரச்சனைக்கு குட்பை சொல்லலாம்… சூப்பர் டிப்ஸ்!

மஞ்சள் கரு, முட்டையின் வெள்ளை கருவை ஒன்றாக சேர்க்க வேண்டாம்:

இந்த டிப்ஸ் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது முக்கியமானது. முட்டையின் வெள்ளை கருவில் இருந்து மஞ்சள் கருவைப் பிரிப்பது ஒரு கடினமான பணியாகும். ஆனால் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு குழி கரண்டியை கொண்டு நீங்கள் மஞ்சள் கருவை மட்டும் பிரித்து எடுக்கலாம். நீங்கள் பஞ்சு போன்ற கேக்கை தயாரிக்க விரும்பினால், முதலில் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் முட்டையின் வெள்ளை கருவை அதில் சேர்க்கவும். இதனை அதிகமாக கலக்காதீர்கள். இப்படி செய்தால் நன்கு பஞ்சு போன்ற பான் கேக் உங்களுக்கு கிடைக்கும். இந்த உதவிக்குறிப்புகள் அனைத்தையும் பின்பற்றி பான் கேக் தயாரிக்கும் முறை குறித்து இங்கு காண்போம்.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கருவை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து நுரை பொங்கி வரும் வரை கலந்து விட வேண்டும். பிறகு அதனுடன் சர்க்கரை, சோடா உப்பு, மைதா மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் மோர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் இறுதியாக முட்டையின் வெள்ளை கருவை சேர்க்கவும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சுற்றிலும் நெய் தடவி அதில் நாம் கலந்து வைத்துள்ள கலவையை சேர்த்து தோசை போல் செய்து சுட்டு எடுக்கவும். பான் கேக் இருபுறமும் நன்கு வெந்த பிறகு எடுத்து அதனை சமமாக வைத்து கொள்ளவும். பிறகு அதன் மீது அரை ஸ்பூன் வெண்ணெய், ஆப்பிள், ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் மற்றும் தேன் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: