Home /News /lifestyle /

கிருஷ்ண ஜெயந்திக்கு முறுக்கு சுட போறீங்களா..? ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க...

கிருஷ்ண ஜெயந்திக்கு முறுக்கு சுட போறீங்களா..? ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க...

கிருஷ்ண ஜெயந்திக்கு முறுக்கு

கிருஷ்ண ஜெயந்திக்கு முறுக்கு

Sri Krishna Jayanthi 2022 : நீங்கள் எளிமையான முறையில் முறுக்கு சுட இந்த ரெசிபியை பாருங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கிருஷ்ண ஜெயந்தி என்றாலே பலகாரங்களுக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக முறுக்கு வகைகள் கட்டாயம் இடம் பெறும். அந்த வகையில் G

    தேவையான பொருட்கள் :

    தண்ணீர் - 1 கப்
    உப்பு - 1/2 tsp
    நெய் - 2 tsp
    அரிசி மாவு - 1 கப்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    கருப்பு எள் -1 tsp
    மிளகாய் தூள் - 1 tsp



    செய்முறை

    கடாய் வைத்து தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். ஒரு கொதி வந்ததும் அதில் உப்பு , நெய் விட்டு கலந்துவிடுங்கள். பின் அரிசி மாவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

    கலந்ததும் எள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறிவிடுங்கள்.

    மிதமான தீயில் மாவை கிண்டிக்கொண்டே இருங்கள். சப்பாத்தி சுடும் பதத்திற்கு மாவின் தண்ணீர் இறுகியதும் அடுப்பை அணைத்துவிட்டு மற்றொரு கிண்ணத்தில் கொட்டிவிடுங்கள்.

    உலர்ந்த அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இந்த நீண்ட நாள் பிரச்சனையை சரியாகிடுமா.!!

    அதன் சூடு தனியும் வரை அப்படியே விட்டு சூடு ஆறியதும் நன்கு பிசைந்துகொள்ளுங்கள். அடுத்ததாக கடாய் வைத்து முறுக்கு சுட எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.

    காய்ந்ததும் மாவை முறுக்கு சுடும் குழாயில் மாவை எலுமிச்சை அளவு பிடித்து அதில் வையுங்கள். பின் குழாயை அழுத்தி பிடித்தவாறு வட்டமாக மாவை சுற்றுங்கள். அதை அப்படியே எடுத்து காய்ந்துள்ள எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சுட்டு எடுங்கள். அவ்வளவுதான் மொறு மொறு தீபாவளி முறுக்கு தயார்.

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Krishna Jayanthi

    அடுத்த செய்தி