ஸ்பைசி மட்டன் தொக்கு ரெசிபி...

மட்டன் தொக்கு

மாங்காய் தொக்கை போலவே காரசாரமான உப்பும் மிளகாயும் கலந்த மட்டன் தொக்கு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க...

  • Share this:
மட்டனில் பொதுவாக குழம்பு, பிரியாணி, கிரேவி, வறுவல் ரெசிபிகளை செய்து எப்படி என்று நமக்கௌ தெரியும்... அந்தவகையில் இப்போது மட்டனில் தொக்கு செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க...

தேவையானவை:

மட்டன் - 1/2 கிலோ

தனியாத் தூள் - 1 ஸ்பூன்

சீரகத் தூள் - 1 ஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 2

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

தயிர் - 2 ஸ்பூன்

இஞ்சி- பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி – தேவையான அளவு

மட்டன் தொக்கு


செய்முறை

முதலில் மட்டனை சுத்தம் செய்துவிட்டு மட்டனுடன் தயிர், உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகத் தூள் சேர்த்து கிளறி குக்கரில் போட்டு தண்ணீர் வற்றும் அளவு வேகவிடவும். இறுதியில் கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் மட்டன் தொக்கு ரெடி.

மேலும் படிக்க.... ஆம்பூர் சிக்கன் பிரியாணி வீட்டிலேயே செய்வது எப்படி?

செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

சிக்கன் பொரியல் சாப்பிட்டுருக்கீங்களா?

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

சிக்கன் லெக் பீஸ் தெரியும் மட்டன் லெக் பீஸ் தெரியுமா?

சுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...?

கேரளா ஸ்டைல் வாழை இலை மீன் வறுவல் ரெசிபி...
Published by:Vaijayanthi S
First published: