Home /News /lifestyle /

ஸ்பைசி நண்டு மசாலா செய்ய ரெசிபி!

ஸ்பைசி நண்டு மசாலா செய்ய ரெசிபி!

நண்டு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. மிளகுடன் நண்டு சமைத்து உண்டால் சளி முறிந்து விடும்.

நண்டு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. மிளகுடன் நண்டு சமைத்து உண்டால் சளி முறிந்து விடும்.

நண்டு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. மிளகுடன் நண்டு சமைத்து உண்டால் சளி முறிந்து விடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
நண்டு உடலில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும். இதனால் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கும். சளி தொல்லை இருப்பவர்கள் தொடர்ந்து நண்டு சாப்பிட்டு வந்தால் நிரந்தரமாக தீர்வு கிடைக்கும். வாங்க காரசாரமான நண்டு மசாலா செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருள்கள்

நண்டு - 1 கிலோ

எண்ணெய் - 1 குழி கரண்டி

இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - அரை ஸ்பூன்

வெங்காயம் - 2

தக்காளி - 2

காய்ங்த மிளகாய் - 4

மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்

மிளகு - 2 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

மல்லி - 2 ஸ்பூன்

சோம்பு - அரை ஸ்பூன்

தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு - 4

உப்பு - தேவைக்கு

கறிவேப்பிலை - மல்லி - சிறிதளவு

கார நண்டு மசாலா


செய்முறை

முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவிக்கொள்ள வேண்டும். பின்னர் நண்டு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மஞ்சள் பொடி சேர்த்து கொதி வந்ததும் தண்ணீரை வடிகட்டிவிடவும். பின்பு வெங்காயம், தக்காளி, மல்லி இலை நறுக்கி கொள்ளவும் . அதன் பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போடவும். வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.

அதே நேரத்தில் மிளகு, மல்லி, சீரகம், சோம்பு லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

கடாயில் வெங்காயம், தக்காளி கிரேவி மசிந்து வந்தவுடன் நண்டை சேர்க்கவும். மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு அத்துடன் அரைத்தமசாலா, தேங்காய் கலவை சேர்த்து 15 நிமிடம் வைத்து மசாலா வாசனை போனவுடன் எண்ணெய் மேலே மிதந்து வரும்போது இறக்கவும். இப்போது
ஸ்பைசி நண்டு மசாலா ரெடி.

மேலும் படிக்க...குழந்தைகளுக்கான காய்கறி சூப் - செய்முறை
Published by:Vaijayanthi S
First published:

Tags: Food

அடுத்த செய்தி