மாலையில் சூடாக அருந்த டிரை பண்ணி பாருங்க ’மசாலா டீ’

தேனீர் சுவை மிகுந்ததாக மட்டுமன்றி ஆரோக்கியம் நிறைந்ததாகவும் மாற்றிட முயற்சி செய்து பாருங்கள்

மாலையில் சூடாக அருந்த டிரை பண்ணி பாருங்க ’மசாலா டீ’
மசாலா டீ
  • Share this:
தேனீர் நேரம் என்பதே மன ஓய்வான நேரம். அதை சுவை மிகுந்ததாக மட்டுமன்றி ஆரோக்கியம் நிறைந்ததாகவும் மாற்றிட முயற்சி செய்து பாருங்கள் ’மசாலா டீ’யுடன்.

தேவையான பொருட்கள் :

ஏலக்காய் - 5


பட்டை - 1
சர்க்கரை - 4
பால் - 1 கப்தண்ணீர் - 4 கப்மிளகு - 1
கிராம்பு - 4
டீ தூள் - 2 மேசைக்கரண்டி
காய்ந்த இஞ்சிப் பொடி - 1 மேசைக்கரண்டி
கிரீன் டீ இலைப் பொடி - 1/2 மேசைக்கரண்டிசெய்முறை :

ஆரம்பிக்கும் முன் மசாலாக்கள் அனைத்தையும் மிக்ஸியில் மைய அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

அடுத்ததாக பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பொங்கி வந்ததும் டீ தூள் , கிரீன் இலைப் பொடி சேர்த்துக் கலக்கவும்.

அடுத்ததாக அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி போட்டு நன்குக் கொதிக்கவிடவும்.

படிக்க: இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள நிமிடங்களில் சமைக்கலாம் ’பாம்பே சட்னி’ - ரெசிபி இதோ...

கொதித்ததும் சர்க்கரை சேர்த்து 4-5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

இறுதியாக இஞ்சிப் பொடி சேர்த்துக் கலக்கவும். அதோடு பாலும் சேர்த்துக் கலக்கிக் கொதிக்கவிடவும்.

பால் பொங்கி வந்ததும் தட்டு போட்டு மூடி இரண்டு நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க விடவும்.

இரண்டு நிமிடங்களுக்குப் பின் அடுப்பை அனைத்து வடிக்கட்டவும். சுவையான மசாலா டீ தயார்.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading