நம்மில் பலருக்கு வெண்டைக்காய் ரொம்ப பிடிக்கும். ஆனால், நாம் வெண்டைக்காயை வைத்து புளிக்குழம்பும், வெண்டைக்காய் பொரியலையும் தவிர வேறு ரெசிப்பிகள் செய்வதில்லை. இன்று, வெண்டைக்காயினை வைத்து சுவையான கலவை சாதத்தை, மிகவும் எளிமையான முறையில் செய்து எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - ¼ கிலோ.
பச்சை மிளகாய் - 1.
சின்ன வெங்காயம் - 6.
புளிக் கரைசல் - 2 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்.
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்.
கடுகு - 1 ஸ்பூன்.
வடித்த சாதம் - 2 கப்.
பூண்டு பல் - 4.
முந்திரி பருப்பு - 10.
கறிவேப்பிலை - 1 கொத்து.
சமையல் எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
> முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி தயார் செய்துக்கொள்ளவும். அதேநேரம், ¼ கிலோ வெண்டைக்காயினை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து காம்பு நீக்கி, பொடி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
> இதையடுத்து, சிறிதளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து புளிக்கரைசல் தயார் செய்துக்கொள்ளவும். பின்னர், 2 கோப்பை அளவிலான (வடித்து வைத்த) வெள்ளை சாதத்தினை ஒரு பாத்திரத்தில் எடுத்து ஆற வைக்கவும்.
> இப்போது, வெண்டைக்காய் கலவை செய்வதற்கு, ஒரு கடாயினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் கடுகு, கறிவேப்பிலை, கடலை பருப்பு, முந்திரி பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
> பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடத்திற்கு நன்றாக வதக்கவும்.
> வெண்டைகாயின் பச்சை வாசம் மற்றும் பிசுபிசுப்பு மாறியதும், இதனுடன் புளிக்கரைசல், மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிட வெண்டைக்காய் கலவை தயார்.
> பின்னர், இந்த கிரேவியுடன் வடித்து வைத்த வெள்ளை சாதத்தை சேர்த்து கிளறினால் டாப்பு டக்கர் வெண்டைக்காய் சாதம் ரெடி. சுவையான இந்த வெண்டைக்காய் சாதத்தினை உருளைக்கிழங்கு பொரியலுடன் சேர்த்து பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food recipes, Ladies finger