ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கிச்சனுக்கு தேவையான சில டிப்ஸ்...

கிச்சனுக்கு தேவையான சில டிப்ஸ்...

கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

தினமும் ஒருமுறையாவது கிச்சனுக்கு செல்லாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கான முக்கியமான சில டிப்ஸ்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமையல் அறையில் ஆண் பெண் என இருவரும் சமைத்து வரும் இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு மிகவும் தேவையான சில எளிய வீட்டு குறிப்புகளையும் சமையல் குறிப்புகளையும் தெரிந்து கொள்வது நல்லது.

1. அடுப்பு மேடையில் எண்ணெய்ப் பிசுக்கு இருக்கும் இடங்களில் கடலைமாவு அல்லது கோதுமை மாவைத் தூவி வைத்திருக்கவும் 15 நிமிடங்கள் கழித்து, ஒரு பழைய துணியால் அழுத்தித் துடைத்துவிட்டு, சோப்புத் தண்ணீர் கொண்டு அலம்பினால் அடுப்பு மேடை எண்ணெய்ப் பிசுக்கு நீங்கி பளிச்சென ஆகிவிடும்.
2. ஃப்ளாஸ்க்கில் பால், காபி, டீ என எதை ஊற்றி வைத்தாலும், சர்க்கரை கலக்காமல் ஊற்றி வைப்பது தான் நல்லது. சர்க்கரை சேர்க்காததால் பல மணி நேரங்கள் ஆனாலும் பானங்கள் கெடாமல் இருக்கும்.
3. பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
4. பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும் லேசாகத் தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.
5. இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால் உளுந்து வடை சுவையாக இருக்கும்.
6. வெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது வதக்கிவிட்டு பிறகு எண்ணெய்யில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும்.
7. சாம்பார் பொடிக்கு அரைக்கும் போது ஒரு கப் புழங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது சாம்பார் குழைவாகவும், கெட்டியாகவும் வரும். இதனால், பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.
8. வறுவல், கூட்டு ஆகியவற்றில் உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் ஒரு ஸ்லைஸ் அல்லது இரண்டு ரஸ்க் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து சிறிது தூவினால் சரியாகிவிடும்.
9. ஒரு கரண்டி கோதுமை மாவை நெய்யில் வாசனை வரும் வரை நன்கு வறுத்து, பின் தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். பிறகு காய்ச்சின பால், சர்க்கரை, ஏலப்பொடி, வறுத்த முந்திரி சேர்க்க சுவையான, மணமான கோதுமை பாயசம் ரெடி.
10. எந்த வகை சூப் செய்தாலும் கொதிக்கும் போது சிறிது பொட்டுக் கடலை மாவை நீரில் கலந்து சேர்த்தால் சூப் திக்காக இருக்கும்.
11. வெண்டைக்காயை வதக்கும் போது புளித்த மோரைச் சேர்த்தால் மொறு மொறு வென இருக்கும்.
12. வத்தக் குழம்பு செய்யும் போது கடைசியாக மஞ்சள், மிளகுத் தூளைச் சேர்த்தால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
13. துவரம் பருப்பை வேக வைக்கும் போது. பருப்புடன் ஒரு டீ ஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால் சாம்பார் இரவு வரை ஊசிப் போகாமல் இருக்கும் உடம்புக்கும் நல்லது.
First published:

Tags: Kitchen Tips