வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியவர்கள், கணவர் என ஒவ்வொருக்கும் பிடித்த உணவை சமைத்து அவர்களை மகிழ்விக்க சமையலில் உள்ள இந்த குட்டி குட்டி ரகசியங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
1. பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
2. பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும் லேசாகத் தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.
3. இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால் உளுந்து வடை சுவையாக இருக்கும்.
4. வெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது வதக்கிவிட்டு பிறகு எண்ணெய்யில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும்.
5. சாம்பார் பொடிக்கு அரைக்கும் போது ஒரு கப் புழங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது சாம்பார் குழைவாகவும், கெட்டியாகவும் வரும். இதனால், பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.
6. வறுவல், கூட்டு ஆகியவற்றில் உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் ஒரு ஸ்லைஸ் அல்லது இரண்டு ரஸ்க் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து சிறிது தூவினால் சரியாகிவிடும்.
7. எந்த வகை சூப் செய்தாலும் கொதிக்கும் போது சிறிது பொட்டுக் கடலை மாவை நீரில் கலந்து சேர்த்தால் சூப் திக்காக இருக்கும்.
8. வெண்டைக்காயை வதக்கும்போது புளித்த மோரைச் சேர்த்தால் மொறுமொறுவென இருக்கும்.
9. வத்தக் குழம்பு செய்யும்போது கடைசியாக மஞ்சள், மிளகுத் தூளைச் சேர்த்தால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
10. துவரம் பருப்பை வேக வைக்கும் போது. பருப்புடன் ஒரு டீ ஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால் சாம்பார் இரவு வரை ஊசிப் போகாமல் இருக்கும் உடம்புக்கும் நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cooking tips, Food