ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இனிமேல் பழம் மற்றும் காய்கறி தோல்களை வீணாக்காதீர்கள்.. இப்படி பயன்படுத்துங்கள்...!

இனிமேல் பழம் மற்றும் காய்கறி தோல்களை வீணாக்காதீர்கள்.. இப்படி பயன்படுத்துங்கள்...!

பழம் மற்றும் காய்கறி தோல்கள்

பழம் மற்றும் காய்கறி தோல்கள்

home tips from fruits peels | வாழைப்பழத்தோலை பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்கள் பளீச்சென்று வெண்மையாக மாறிவிடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக நாம் அனைவரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உறிக்கும்போது அதன் தோல்களை பயன்படுத்துவதில்லை. அப்படியே குப்பையில் போட்டு விடுகிறோம். ஆனால் அவற்றில் பலவிதமான நன்மைகள் உள்ளன. அவை குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

உருளைக்கிழங்குத் தோலில் விட்டமின் சி உள்ளது. இது கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையங்களை சீர் செய்யும். இத்தோலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிந்தவுடன் கண்களைச் சுற்றி 15 நிமிடங்களுக்கு வைத்தால் கண்களுக்கு குளிச்சியை அளிப்பதுடன் கருவளையங்கள் நீங்கி பொலிவுடன் காணலாம்.
வாழைப்பழத்தோலை பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்கள் பளீச்சென்று வெண்மையாக மாறிவிடும்.
ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சைத் தோலை ஜன்னல்கள் மற்றும் கதவின் ஓரங்களில் வைக்க கரப்பான் மற்றும் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். இந்த பழத் தோலை குளிக்கும் நீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு அந்த நீரில் குளித்தால், சருமம் பொலிவுடனும் நறுமணத்துடனும் நீண்ட நேரம் இருக்கும்.
புதினாவின் காய்ந்த இலைகளையோ அல்லது அதன் காம்புகளையோ வீட்டிற்குள் வைத்தால் எலி, சிலந்தி மற்றும் தேவையற்ற பூச்சிகளை வீட்டிற்குள் வராமல் தடுக்கலாம்.
வாசனை செண்டை வினிகருடன் கலந்து வீட்டை சுத்தம் செய்யலாம்.
ஃபில்டர் காப்பியை எறும்பு புற்றின் அருகில் கொட்டினால் எறும்புகள் ஓடிவிடும்.
கடுமையான கரைகளை பேக்கிங் சோடவை பயன்படுத்தி அகற்றலாம்.
ஒரு டம்ளர் தண்ணீரில் 5 ஸ்பூன் டேபிள் உப்பை கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்து விட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.
பழம் மற்றும் காய்கறித் தோல்களை வீட்டில் உள்ள ரோஜா செடிகளில் கொட்டினால் நன்றாக பூ பூக்கம். செடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
பழம் மற்றும் காய்கறித் தோல்களை மிக்ஸியில் நன்றாக அரைத்து தென்னை மரங்களுக்கும் உரமாக பயன்படுத்தலாம்.
First published:

Tags: Fruits, Vegetables