சுவாச பிரச்சனையா? அப்போ இந்த அல்வா செய்து சாப்பிடுங்க!

பேசன் அல்வா

கடலை மாவு மற்றும் பருப்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மூலப்பொருட்கள் அதிகளவில் இருக்கின்றன. இதில், இனிப்பு பொருட்களை செய்து, சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

  • Share this:
குளிர்காலத்தில் அல்வா சாப்பிட நிறையபேர் யோசிப்பார்கள். ஆனால், இந்த பேசன் அல்வாவில் இருக்கும் நன்மைகளை அறிந்து கொண்டால், நிச்சயம் இதனை சாப்பிடாமல் இருக்கமாட்டீர்கள்.

ஓராண்டுக்கும் மேலாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க, பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய சூழலில் மக்கள் அனைவரும் உள்ளனர். தடுப்பூசிகள் வந்துவிட்டாலும், கொரோனா மீதான பயம் மக்களுக்கு துளியும் குறையவில்லை. இந்த நிலையில் குளிரும் சேர்ந்து கொண்டதால், உடல் நலனில் அனைவருக்கும் கூடுதல் அக்கறை தேவை.

சளி, இருமல் கூட நமக்கு கூடுதல் தொந்தரவுகளை கொடுக்கும். இதனால் அன்றாட உணவில் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. குளிர்காலத்தில் அதிகம் ஏற்படும் சுவாச பிரச்சனைகளை தீர்க்க கூடிய, நுரையீரல், சுவாசப் பாதைகளை பாதுகாக்கும் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் நம் வீட்டு சமையலறையில் உள்ள கடலை மாவைப் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், அதனுடைய நன்மைகள் நமக்கு தெரியாது.

பேசன் அல்வாவின் நன்மைகள் :

* கடலை மாவு மற்றும் பருப்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மூலப்பொருட்கள் அதிகளவில் இருக்கின்றன. இதில், இனிப்பு பொருட்களை செய்து, சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

* குறிப்பாக கடலை மாவு மூலம் செய்யப்படும் பெசன் ஹல்வாவில் நம் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிரம்ப உள்ளன. கடலை மாவு ஆக்ஸிஜனேற்றிகளின் சக்தியாக இருப்பதால், நாசி நோய்த்தொற்றுகள் மற்றும் சிக்கல்களை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

* அல்வா வடிவத்தில் அவற்றை சாப்பிடும்போது, தொண்டையை மென்மையாக்குவதுடன், தொண்டை தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.

* நாசிப் பாதையை சுத்தமாக்குவதுடன், கபம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது. புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

* கடலை மாவு, கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத் தேவைகளை அதிகரிப்பதில் பேசன் ஹல்வா பயன்படுவதால், கர்ப்பிணி பெண்களும் எடுத்துக்கொள்ளலாம்.

* ரத்தத்தில் ஊட்டச்சத்துகளின் அளவை அதிகரிக்கவும் பயன்படுகிறது. கிராம் மாவில் ஹல்வா செய்து சாப்பிடும்போது, எலும்புகளின் பலம் அதிகரிக்கும், இருமல், சளி போன்ற பிரச்சனைகளும் உங்களை பாதிக்காது.

கடலை மாவு அல்வா செய்முறை :

தேவையான பொருட்கள்:

கடலைமாவு - 1/2 கப்,
சர்க்கரை - 1 கப்,
நெய் - 1 கப்,
முந்திரி - 5,
கேசரி பவுடர் - 2 சிட்டிகை,
ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டிசெய்முறை

முதலில் கடலைமாவை கட்டியில்லாமல் சலித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து கடலை மாவைப் போட்டு அதில் 2 தேக்கரண்டி நெய் விட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

தனியே1 1/2 கோப்பை தண்ணீரில் கேசரிபவுடர் சேர்த்து, அடுப்பில் இருக்கும் கடலை மாவில் கொஞ்சம் கொஞ்மாக ஊற்றி கட்டியில்லாமல் கிளறவும்.

கடலை மாவு முக்கால் பதம் வெந்ததும் சர்ககரையைச் சேர்த்து நன்கு கிளறி விடவும். பிறகு ஏலக்காய்த் தூள் சேர்த்து, அடுப்பின் தணலை குறைவாக வைத்து, அடிபிடிக்காமல் கிளறி விடவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல், அல்வா பதம் வரும்போது மிதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி, வறுத்த முந்திரியைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

தற்போது, சூடான அல்வா ரெடி. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சாப்பிட்டு மகிழுங்கள்.

 

 
Published by:Sivaranjani E
First published: