• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குடும்ப தலைவிகளுக்கான சில சமையல் குறிப்புகள்...

குடும்ப தலைவிகளுக்கான சில சமையல் குறிப்புகள்...

ரசப்பொடி இல்லாத போது ரசம் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிலகு சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம் பருப்பையும் வைத்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.

  • Share this:
    1.ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

    2. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

    3. காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

    4. பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

    5. தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

    6. தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலெ ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.

    மேலும் படிக்க... ஹோட்டல் போல தோசை செய்வது எப்படி தெரியுமா?



    7. சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது... நீர்த்தும் போகாது.

    8. உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது, நறுக்கிய வில்லைகளின் மேல் சிறிது பயத்தம் மாவு தூவிவிட்டுப் பொரித்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.

    9. கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் ஸ்லைஸை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லெட்டின் சுவை கூடும்.

    10. ரசப்பொடி இல்லாத போது ரசம் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிலகு சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம் பருப்பையும் வைத்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.

    11. கடலைப் பருப்பு வடை செய்வதற்கு பதிலாக காராமணியை ஊரவைத்து அத்துடன் வெங்காயம், சோம்பு, பச்சை மிலகாய், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து, அரைத்து வடை சுட்டு, சுடச்சுட சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    12. அடைக்கு ஊறவைக்கும் அரிசி, பருப்புடன் சிறிது கொண்டைக் கடலையையும் ஊறவைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும்.
    மேலும் படிக்க... சமையலை சார்ந்த சில தகவல்களும் டிப்ஸ்களும்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: