• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • கேரட்டில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.. தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..

கேரட்டில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.. தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..

காட்சி படம்

காட்சி படம்

கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

 • Share this:
  இனிப்பு என்று சொன்னாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு என்றால் அது அல்வாதான். அதை வீட்டில் செய்வது கடினமென்று பெரும்பாலும் பெண்கள் அதை செய்வதில்லை. ஆனால் கேரட்-ஐ பயன்படுத்தி மிகமிக சுலபமாகவும், சத்தான முறையிலும் வீட்டிலேயே அல்வாவை செய்ய முடியும்.

  குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இது குறிப்பாக இந்திய துணைக் கண்டம் முழுவதும் பிரபலமாக உள்ளது. மேலும் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

  கேரட்டின் நன்மை : கேரட்டுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கேரட் வைட்டமின் ஏ- வை பீட்டா கரோட்டின் வடிவத்தில் சேமிக்கிறது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது நமது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் நோய்த்தொற்றுகள், அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது.

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : கேரட் அல்வாவை தயாரிக்க பால், ஏலக்காய் மற்றும் பாதாம் ஆகிய பொருட்கள் தேவைப்படுகிறது. பசு அல்லது எருமை பாலில் வைட்டமின் டி, புரோபயாடிக்குகள் மற்றும் இம்யூனோகுளோபூலின் ஆகியவை உள்ளன. ஏலக்காயில் வைட்டமின் சி உள்ளது. இது இருமல் மற்றும் சளி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. பாதாம் அதன் வைட்டமின் ஈ உள்ளடக்கத்துடன் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது.

  எடை இழப்பு :  கேரட் ஒரு நார்ச்சத்து வேர்கள் என்பதால், அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே அதை சாப்பிடுபவர்களுக்கு அவ்வளவு பசி ஏற்படாது. இதனால் எடை அதிகரிப்பை தடுக்கலாம். உடல் எடை அதிகம் கொண்டிருப்பவர்கள், அதிக கொழுப்பைக் கொண்டவர்கள். இது அவர்களில் இதயத் தடுப்பு அபாயத்தை உயர்த்தும். கேரட்டை வழக்கமாக உட்கொள்வது அதிகப்படியான கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

  Also read : மாதுளை ஜூஸ் குடிக்கச் சொல்வதற்கு இதுதான் காரணமா..? 10 வகை பலன்களை மிஸ் பண்ணிடாதீங்க..!

  சருமத்தை மேம்படுத்துகிறது :தோலில்6 ஈரப்பதத்தைத் தக்கவைக்க பெரும்பாலான மக்கள் எண்ணெய்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்களை உபயோகிப்பார்கள். அதுவே கேரட்டில் வைட்டமின் ஏ பீட்டா கரோட்டினாக உள்ளது. ஆய்வின்படி, தோல் செல்களை வழக்கமாக மாற்றுவதில் வைட்டமின் ஏ உதவுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

   அதிக அளவு இனிப்பு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். நீரிழிவு நோயை ஏற்படுத்தும். இருப்பினும் இயற்கையான , சத்தான இனிப்புகளை அளவோடு சாப்பிடுவதால் தீமைகளை காட்டிலும் நன்மைகள் அதிகம்.


  கேரட் அல்வாவை வீட்டிலேயே எப்படி செய்வது? ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து சிறிது நெய்யினை உருக்கி, அதில் முந்திரி, பாதாம், திராட்சையினை வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளவும். மிச்சமிருக்கும் நெய்யினை ஊற்றி, அதில் துருவிய கேரட்டினை கொட்டி நன்றாக வதக்கவும். கேரட் வதங்கியதும் பால் சேர்த்து வேகவிடவும். கேரட் பச்சை வாசனை போனதும் சர்க்கரையை கொட்டி கிளறவும். கேரட் சுருண்டு வரும்போது ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, பாதாம் திராட்சையினை சேர்த்து வதக்கி, அல்வா பதம் வந்ததும் இறக்கி பரிமாறலாம். குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: