ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மழையை ரசிக்க சூடா ஒரு கப் காஃபியுடன் சுட சுட கடலை மாவு போண்டா சாப்பிட்ட எப்படி இருக்கும்..? ரெசிபி இதோ...

மழையை ரசிக்க சூடா ஒரு கப் காஃபியுடன் சுட சுட கடலை மாவு போண்டா சாப்பிட்ட எப்படி இருக்கும்..? ரெசிபி இதோ...

கடலை மாவு போண்டா

கடலை மாவு போண்டா

சூடானா சுவையான ரொம்பா ஈசியா வீட்ல இருக்குற பொருட்களை வச்சே டக்குனு சமைக்கிற ஒரு ஸ்நாக்ஸ் தான் இந்த கடலை மாவு போண்டா!

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மழைக்காலம் வந்தாலே பெருசா ஒரு வேலையும் இருக்காது. ஆனா நம்ம நாக்கும் வயிறும் அப்போதான் நம்மக்கிட்ட சாப்புட எதாச்சும் கொடுனு கேக்கும். அதுவும் அடிச்சு பெய்ற மழைல ஜில்லுனு வீசுற காத்துல அப்படியே சூடா மொறு மொறுனு எதாச்சும் சாப்பிட கொடுத்தா மனசும் வாயும் வேணாம்னா சொல்ல போகுது..

  உங்களுக்காகவே ரொம்பா ஈசியா வீட்ல இருக்குற பொருட்களை வச்சே டக்குனு சமைக்கிற ஒரு ஸ்நாக்ஸ் தான் இந்த கடலை மாவு போண்டா!

  கடலை மாவு போண்டா

  தேவையான பொருட்கள்:

  • ஒரு கப் கடலை மாவு
  • அரை கப் அளவு அரிசி மாவு
  • வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • கருவேப்பிலை, புதினா,கொத்த,மல்லி இலை
  • உப்பு, ஓமம், பெருங்காயம் தேவையான அளவு
  • தயிர் ஒரு டீஸ்பூன் ( போண்டா இலதுவாக இருக்க)
  • வேண்டுமானால் ( இஞ்சி, பூண்டு பேஸ்ட்)
  • அனைத்தையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

  செய்முறை:

  வானொலியில் எண்ணை ஊற்றி, எண்ணை காய்ந்த பிறகு பிசைந்து வைத்திருக்கும் மாவை உருண்டையாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  உருண்டை பொன்னிறம் ஆகும் வரை காத்திருந்து வெளியில் எடுக்கவும். தீயை மிதமான சூட்டில் வைப்பதன் மூலம் போண்டாவின் உட்பகுதியும் நன்றாக வெந்து சுவைக்கொடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

  Also Read : ஜில்லென குளிரும் கிளைமேட்டிற்கு அட்டகாசமான டீ குடித்தால் எப்படி இருக்கும்..? உங்களுக்கான 5 ரெசிபீஸ்

  தண்ணீரில் கையை அடிக்கடி நனைத்துவிட்டு உருண்டை பிடிப்பதன் மூலம் மாவு கையில் ஒட்டுவதை தவிர்க்க முடியும்.

  உங்களுக்கு விருப்பமேயானால் இந்த போண்டா மாவின் கலவையில் பீன்ஸ், கேரட், சோளம் முதலியவற்றையும் சேர்த்து குழந்தைகளுக்கு சத்தான போண்டாவாக கொடுக்கலாம்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Evening Snacks, Monsoon