Sivangi : குக் வித் கோமாளி ஷிவாங்கி செய்த மாங்காய் ஊறுகாய்..! இப்போ இதுதான் யூடியூப் டிரெண்டிங்..!

ஷிவாங்கி

அவர் கேரளாவில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்கு சென்ற அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் பெரியம்மா மாங்காய் ஊறுகாய் போடுவதில் பயங்கரமான ஸ்பெஷல். அவர் செய்யும் ஊறுகாய்க்கு நான் அடிமை எனக் கூறியுள்ளார்.

  • Share this:
ஷிவாங்கி என்றாலே கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது. குக் வித் கோமாளி மூலம் புகழ் உச்சியை தொட்ட ஷிவாங்கி சமூக வளைதளங்களின் கவன ஈர்ப்பாளராக மாறியுள்ளார். அவர் எந்த வீடியோ போட்டாலும் டாப் லிஸ்டில் இடம் பெற்றுவிடும். அந்த வகையில் தனுடைய யூடியூப் சேனலில் அவ்வபோது போடும் சில வீடியோக்கள் டிரெண்டிங்கிலும் இடம் பெறும்.

அப்படி தற்போது அவர் கேரளாவில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்கு சென்ற அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் பெரியம்மா மாங்காய் ஊறுகாய் போடுவதில் பயங்கரமான ஸ்பெஷல். அவர் செய்யும் ஊறுகாய்க்கு நான் அடிமை எனக் கூறியுள்ளார். எனவே அவரை மாங்காய் ஊறுகாய் செய்து தரும்படி கூறுகிறார்.

பின் உடனே வீட்டின் முன் வாசலில் இருக்கும் மாமரத்தில் மாங்காய்களை பரித்து வந்து ஊறுகாய் போட தயாராகின்றனர். பின் தன் பெரியம்மாவிற்கு கொஞ்சம் கொஞ்சம்தான் தமிழ் வரும் என்று கூறிவிட்டு ரெசிபி உள்ளே செல்கின்றனர்.

மாங்காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ளனர். பின் கொஞ்சம் சுடு தண்ணீர் போட்டுக்கொள்கின்றனர். தண்ணீர் கொஞ்சம் சூடேறியதும் வெல்லம் சேர்த்துக்கொள்கின்றனர். இதனால் ஊறுகாய் கெட்டுப்போகாமல் இருக்கும் என ஷிவாங்கி பெரியம்மா கூறுகிறார். பின் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை பேனில் போட்டு அதன் பச்சை வாசனை போக கிண்டி எடுத்துக்கொள்கின்றனர்.



பின் கல் உப்பு சேர்த்து நன்கு கிளறிக்கொள்கின்றனர். அடுத்ததாக அந்த மிளகாய் தூளை நறுக்கிய மாங்காயில் சேர்த்து கிளறுகின்றனர். அதோடு கறிவேப்பிலையும் கொஞ்சம் சேர்த்துக்கொள்கின்றனர். அதில் நல்லெண்ணெய் ஒரு கரண்டி சேர்த்து கிளறுகின்றனர். பின் கொஞ்சம் பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்கின்றனர். இறுதியாக வெல்லம் கலந்த சுடு தண்ணீர் நன்கு ஆறியதும் மாங்காயில் ஊற்றி கிளறுகின்றனர்.

சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் காலிஃப்ளவர் சப்ஜி..! எப்படி செய்வது தெரியுமா?

பின் அதை ஒரு பாட்டிலில் அடைத்து 2 ,3 மாதங்கள் கழித்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் ஷிவாங்கியின் பெரியம்மா. கடையில் ஊறுகாய் வாங்குவதை விட மாங்காய்களை வாங்கி வீட்டில் நீங்களே செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என பார்வையாளர்களுக்கு குறிப்புகளும் கொடுக்கிறார்.

ஷிவாங்கியால் டிரெண்டாகும் இந்த மாங்காய் ஊறுகாயை நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பாருங்க.

 

 
Published by:Sivaranjani E
First published: