ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சீதாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? இனி இதை மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

சீதாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? இனி இதை மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

சீதாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

சீதாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

சாதாரணமாக நம்முடைய வீட்டு தோட்டத்திலே கூட இந்த மரத்தை வளர்க்க முடியும் என்றாலும் கூட, பலருக்கு இப்படியொரு பழம் இருப்பது தெரியாது அல்லது பழக்கடைகளில் பார்த்திருந்தாலும் கூட, இதன் சுவை எப்படி இருக்குமோ என்ற ஐயத்தில் வாங்குவதை தவிர்த்திருப்பார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அனைத்து வகை பழங்களிலும் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு பழத்திலும் உள்ள ஊட்டச்சத்துகளுக்கு ஏற்ப, நம் ஆரோக்கியத்திற்கான பலனை தரும். அப்படி நம் உடலுக்கு, குறிப்பாக 4 விதமான பலன்களை தரக் கூடியது சீதாப்பழம் ஆகும். பழங்கள் என்றதும் சட்டென்று ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், கொய்யா போன்றவை நினைவுக்கு வரும் நம்மில் பலருக்கு சீதாப்பழம் என்ற பெயரே புதுமையாக தோன்றாலாம்.

சாதாரணமாக நம்முடைய வீட்டு தோட்டத்திலே கூட இந்த மரத்தை வளர்க்க முடியும் என்றாலும் கூட, பலருக்கு இப்படியொரு பழம் இருப்பது தெரியாது அல்லது பழக்கடைகளில் பார்த்திருந்தாலும் கூட, இதன் சுவை எப்படி இருக்குமோ என்ற ஐயத்தில் வாங்குவதை தவிர்த்திருப்பார்கள்.

சமதளப் பகுதிகள் மட்டுமல்லாமல் மலைப் பிரதேசங்களில் மிக அதிகமாக விளையக்கூடியது இந்த சீதாபழம். மலைகளில் விளையும் பழங்கள் சற்று பெரியதாக இருக்கும். பொதுவாக பச்சை அல்லது வயலெட் கலர்களில் காய்க்கும் இந்த சீதா, காயாக இருக்கும்போது மிக கடினமாக இருக்கும். அதுவே பழுத்துவிட்டால் ரொம்பவே சாஃப்ட் ஆகிவிடும்.

சீதாப்பழத்தின் மனம் நம் மூக்கை துளைக்கும். இந்தப் பழத்தில் விட்டமின் சி, விட்டமின் பி6, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகிய சத்துக்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது.

சுவை எப்படி இருக்கும்?

சீதாப்பழத்தின் வெளிப்புற தோல் கடினமானதாக இருக்கும். அதை நாம் சாப்பிட முடியாது. உள்ளே வெள்ளை நிற க்ரீம் போன்ற சதைப்பிடிப்பு கொண்ட பழமும், அதனூடாக ஏராளமான கருப்பு நிற கொட்டைகளும் இருக்கும். இந்த விதைகளை நாம் நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். சதைப் பகுதி இனிப்புச் சுவை கொண்டதாக இருக்கும்.

Also Read : சாக்லேட் சாப்பிட்டால் முகப்பருக்கள் வருமா..? விளக்கும் ஆய்வு

சுருக்கமாக சொன்னால், ஒரு கொய்யாவை போன்ற சதைப் பகுதியும், அதேபோன்ற சுவையும் தான் சீதாப்பழத்தில் இருக்கிறது. அதானாலேயே கிராமப்புறங்களில் இதனை சீதா கொய்யா என்றும் குறிப்பிடுவார்கள். வீட்டிலேயே விளையக் கூடியது மற்றும் விலை மலிவானது என்பதால் அனைத்து தரப்பு மக்களும் சாப்பிடுவதற்கு உகந்த பழமாக இது இருக்கிறது. இனி இதில் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

அல்சருக்கு நல்லது

நீண்டகாலமாக அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் சீதாப்பழம் சாப்பிட்டு வர, அவர்களுக்கு அந்தப் பாதிப்பு வெகுவிரைவில் குணமாகும். அதேபோன்று அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்களும் இந்தப் பழத்தை சாப்பிடலாம். சீதாப்பழம் நமது உடலில் மெட்டாபாலிச நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். நமது உணவை ஆற்றலாக மாற்றுக் கூடிய அம்சம் இதில் உள்ளது.

கண், இதய நலனுக்கு நல்லது

சீதாப்பழம் சாப்பிடுவதால் கண் பார்வை மேம்படும். இதய நலன் மற்றும் மூளையின் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும் சிறந்தது. சீதாப்பழத்தில் நுண் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது சருமத்திற்கு மிருதுவான தோற்றத்தை தரும். சிறுவயதிலேயே கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை கொடுக்கலாம்.

Also Read : கிரீன் ஜூஸ் அல்லது ABC ஜுஸ்... உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது..?

ஹெபி அளவு மேம்படும்

நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கு சீதாப்பழம் உதவியாக இருக்கிறது. இரத்தச் சோகை கொண்டவர்கள், கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பெண்கள் இந்த சீதாப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.

நீண்ட கால நோய்களை தடுக்கும்

நிறைய நோய் எதிர்ப்பு சக்தி சீதாப்பழத்தில் உள்ளது. இது உடல் பருமனை தடுக்கக் கூடியது. ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். புற்றுநோயை தடுப்பதற்கு தேவையான பண்புகள் இந்த சீதாபழத்தில் உள்ளன. செரிமானப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருபவர்கள் சீதாபழத்தை சாப்பிட்டால், அதில் இருந்து தீர்வு கிடைக்கும்.

First published:

Tags: Health Benefits, Sitaphal Fruit