முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாதுளம் பழத்தை உரிப்பதற்கு இப்படி ஒரு எளிதான வழிமுறை உள்ளதா?

மாதுளம் பழத்தை உரிப்பதற்கு இப்படி ஒரு எளிதான வழிமுறை உள்ளதா?

மாதுளம் பழம்

மாதுளம் பழம்

சாதாரணமாக வெறும் கைகளை கொண்டு மாதுளை பழத்தை உரிக்கும் போது அதிக அளவு பழச்சாறுகள் கீழே சிந்தி விடவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த முறையில் நாம் எளிதாக எந்தவித சேதமும் இன்றி மாதுளை பழங்களை உரித்து ருசித்து உண்ணலாம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாதுளை பழம் நம் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கொடுப்பதோடு, மிகவும் சுவை மிகுந்த அனைவருக்கும் பிடித்த பழங்களின் வரிசையில் முன்னிலையில் இருக்கிறது. அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பழச்சாறுடன் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பழமாக இருக்கும் இதனை அப்படியே சாப்பிட்டாலும் அல்லது சாலட் வகைகளோடு சேர்த்து சாப்பிட்டாலும் மாதுளையின் சுவை மட்டும் தனியாக தெரியும். அந்த அளவிற்கு அதிக இனிப்பு சுவையை உடையது. மாதுளையில் உள்ள ஒரு பிரச்னை என்னவென்றால் இதனை உரிப்பதற்குள் படாதபாடு பட வேண்டியதிருக்கும். பலரும் மாதுளை பழத்தை தவிர்ப்பதற்கு காரணமே இதனை உரிப்பதற்கு என்று மெனகெட விரும்பாதது தான்..

ஆனால் உண்மையிலேயே அனைத்து விதமான பழங்களையும் உரிப்பதற்கு அதற்கேற்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்கேற்ப மாதுளை பழத்தை உரிப்பதற்கு என்று கூட மிக எளிமையான சரியான வழிமுறை ஒன்று உள்ளது. இதை பற்றிய ஒரு வீடியோ தான் இன்ஸ்டாகிராமில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. மாதுளையில் உள்ள பழச்சாறை வீணாக்காமல் எவ்வாறு அதனை உரிப்பது என்பதை பற்றி இந்த வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.




 




View this post on Instagram





 

A post shared by Satvic Movement (@satvicmovement)



சாத்விக் மொமெண்ட் என பெயரிடப்பட்டுள்ள அந்த இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் தான் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதுளை பழத்தை சரியாக உரிப்பதற்கு முதலில் அதன் மேற்புறத்தில் சதுரமான வடிவத்தில் வெட்டி அதன் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். இப்போது அதன் காம்பானது மாதுளை பழத்தை நான்கு பகுதிகளாக பிரித்து வைத்திருப்பதை நம்மால் காண முடியும். உன்னிப்பாக கவனித்தால் அந்த காம்பு பகுதியில் இருந்து நான்கு பகுதிகளிலும் மெல்லிய கோடு போன்ற பகுதியானது நான்கு புறங்களிலும் செல்லும்.

அந்த கோடுகளுக்கு ஏற்ப மாதுளை பழத்தின் வெளிப்புறத்தில் அதன் தோள் பகுதியில் சதுரமாக நாம் அதனை வெட்டி எடுக்க வேண்டும். இவ்வாறு வெட்டும் போது முழுமையாக வெட்டி எடுத்து விடக்கூடாது வெறுமனே அந்த தோலில் கீறல் போல போட்டு, அந்த குறிப்பிட்ட பகுதியை ஏற்பட்டும் அதன் காம்பிலிருந்து பிரிந்து வருமாறு வெட்ட வேண்டும். இதுபோலவே பழத்தின் நான்கு பக்கங்களையும் செய்து முடித்த பின்பு, அதன் தோள் பகுதியுடன் சேர்ந்து பழமானது தட்டையாக விரிந்தது போன்ற அமைப்பிற்கு வந்துவிடும்.

தற்போது உள்ளே இருக்கும் அந்த மாதுளை முத்துக்களை நம்மால் மிக எளிதாக பார்க்க முடியும். இப்போது கடைசி கட்டத்திற்கு வந்து விட்டோம். ஒரு கிண்ணம் நிறைய நீரை எடுத்துக்கொண்டு நாம் வெட்டி வைத்துள்ள மாதுளை பழத்தை அதன் மாதுளை முத்துக்கள் அடிப்புறம் வரும் வகையில் வைத்து நீரினுள் வைக்க வேண்டும். இவ்வாறு நீரினுள் மூழ்க வைத்த பிறகு மிக லேசான ஒரு அழுத்தம் கொடுத்து மாதுளை முத்துக்களை வெளியே எடுக்க பார்த்தாலே, அவை எளிதாக தோலில் இருந்து பிரிந்து வந்து விடும். அவ்வளவுதான் இவ்வாறாக பழம் முழுவதையும் உரித்து எடுத்து விடலாம்.

Also Read : டிராகன் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..? எப்போது சாப்பிட்டால் நல்லது..?

சாதாரணமாக வெறும் கைகளை கொண்டு மாதுளை பழத்தை உரிக்கும் போது அதிக அளவு பழச்சாறுகள் கீழே சிந்தி விடவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த முறையில் நாம் எளிதாக எந்தவித சேதமும் இன்றி மாதுளை பழங்களை உரித்து ருசித்து உண்ணலாம்.

First published:

Tags: Cooking tips, Pomegranate, Pomegranate Peel, Pomegranate skin