முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தேங்காய் சேர்க்காமல் வெள்ளை சட்னியா..? இதோ ரெசிபி...

தேங்காய் சேர்க்காமல் வெள்ளை சட்னியா..? இதோ ரெசிபி...

வெள்ளை சட்னி

வெள்ளை சட்னி

சட்னிக்கு தேங்காய் இல்லையே என நீங்கள் வருத்தப்படும் நேரத்தில் இந்த சட்னியை அரைத்துவிடுங்கள். வீட்டில் இருப்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சட்னி என்றாலே அதன் மூலப்பொருள் தேங்காய் தான். ஆனால் அந்த தேங்காயே இல்லாமல் சட்னியை செய்வது ஆச்சரியமான விஷயம்தான். சட்னிக்கு தேங்காய் இல்லையே என நீங்கள் வருத்தப்படும் நேரத்தில் இந்த சட்னியை அரைத்துவிடுங்கள். வீட்டில் இருப்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

பொட்டுக்கடலை - 1/4 கப்

எண்ணெய் - 2 tsp

பச்சை மிளகாய் - 2

கடுகு - 1/2

கறிவேப்பிலை - சிறிதளவு

வெங்காயம் - 1

புளி - சிறிதளவு

பூண்டு - 2 பல்

செய்முறை :

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சைமிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.

பின் அந்த கலவை சூடு ஆறியதும், மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் பொட்டுக்கடலையையும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

Also Read : தேங்காய் பால், சர்க்கரை, மாவு கலந்து ஆரோக்கியமான கோவா ஸ்பெஷல் கோன் இட்லி (Goan idli) ரெசிபி டிப்ஸ்.!

மைய அரைக்க வேண்டாம். உப்பு சேர்த்து முக்கால்வாசி அரைத்தால் போதும். அப்போதுதான் அந்த சட்னிக்கான சுவை கிடைக்கும்.

பின் எப்போதும்போல் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால் சட்னி தயார்.

First published:

Tags: Chutney, Food recipes