ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மஞ்சள் நிறத்தில் வெல்லம் இருந்தால் வாங்கக் கூடாதா..? போலி மற்றும் ஒரிஜினல் வெல்லத்தை கண்டறிய டிப்ஸ்

மஞ்சள் நிறத்தில் வெல்லம் இருந்தால் வாங்கக் கூடாதா..? போலி மற்றும் ஒரிஜினல் வெல்லத்தை கண்டறிய டிப்ஸ்

வெல்லம்

வெல்லம்

வெல்லத்தின் தூய்மைக்காக சோடா மற்றும் கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன. உண்மையான வெல்லத்தின் நிறம் அடர் பிரவுன் நிறத்தில்தான் இருக்கும். ஆனால் சந்தையில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் விற்கப்படுகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இன்று பலரும் அரோக்கியம் கருதி சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பயன்படுத்துகின்றன. ஆனால் அதிலும் கலப்படம் என்னும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தையில் வெல்லம் வாங்கப்போனால் பல நிறங்களில் விற்கப்படுகிறது. ஆனால் அதில் எது அசல் மற்றும் போலி என்பதை கண்டறிவதில் குழப்பம் நிலவுகிறது. அதோடு அவற்றிலும் கெமிக்கல் கலப்படங்கள் செய்வதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்கவே இந்த கட்டுரை.

  பிரபல செஃப் பங்கஜ் படௌரியா இன்ஸ்டாவில் தொடர்ந்து கிட்சன் குறிப்புகளை வழங்கி வருகிறார். இவரின் குறிப்புகளை பார்க்கவே கூட்டம் குவிகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெல்லத்தில் நடக்கும் கலப்படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டது வைரலானது.

  அதாவது அந்த வீடியோவில் ”வெல்லத்தின் தூய்மைக்காக சோடா மற்றும் கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன. உண்மையான வெல்லத்தின் நிறம் அடர் பிரவுன் நிறத்தில்தான் இருக்கும். ஆனால் சந்தையில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் விற்கப்படுகின்றன. அவ்வாறு இருந்தால் அவை கெமிக்கல் கலந்தவை என்று அர்த்தம்” எனக் கூறியுள்ளார்.

  செஃப் கூறியதுபோல் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் கலந்தவாறு வெல்லத்தின் நிறம் இருந்தால் அவை கெமிக்கல் கலப்படம் கொண்டவையாக இருக்கலாம். செயற்கையான முறையில் நிறத்தை உருவாக்க கால்சியம் கார்பனேட், சோடியம் பைகார்பனேட் போன்ற கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன. இதில் கால்சியம் கார்பனேட் வெல்லம் எடை அதிகரிக்கவும், சோடியம் கார்பனேட் பாலிஷான நிறத்தை அளிக்கவும் கலக்கப்படுகிறது.

  எனவே அடர் பிரவுன் மற்றும் கருமையான நிறத்தில் இருந்தால் அதுதான் கெமிக்கல் இல்லாத அசல் வெல்லம் என செஃப் கூறியுள்ளார். ஏனெனில் கரும்புச் சாறு நன்கு கொதிக்க வைத்தால் அது அடர் பிரவுன் மற்றும் கருப்பு நிறத்தில்தான் மாறும். அதில் கெமிக்கல் கலப்படமாகும்போதுதான் மஞ்சள் நிறமாக மாறுகிறது.

  உங்கள் காலையை நட்ஸ், பாதாமுடன் ஆரம்பித்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா..?

  அடுத்ததாக வெல்லத்தின் சுவை உப்பு அல்லது கசப்புத் தன்மை இருக்கக் கூடாது. அதேபோல் வெல்லத்தில் சர்க்கரைப் போன்ற கிரிஸ்டல் தூள்கள் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் கரும்பு சாறை குறைத்துவிட்டு இனிப்பு சுவை கூட்ட சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கலாம்.


  மற்றொரு சோதனையாக வெல்லத்தை தண்ணீரில் போட்டு கரைத்துப்பாருங்கள். இறுதியில் அந்த தண்ணீரில் சுண்ணாம்பு படிவம்போல் இருந்தால் கலப்படம் இருக்கிறது என அர்த்தம். தண்ணீரில் நன்கு கரைந்தால் அது அசல் வெல்லம்.

  எனவே இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் , விட்டமின் டி என நிறைந்த வெல்லத்தை இனி வாங்கும்போது அது அசல்தானா என மதிப்பீடு செய்து வாங்குங்கள்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Cooking tips, Home tips, Jaggery, Kitchen Hacks, Kitchen Tips