ரம்ஜானுக்கு தடபுடலான சமையல் வேலைகள் நடக்கும். அந்த சமயத்தில் முடிந்தவரை வேலைகளை எளிதாக முடிக்கவே திட்டமிட வேண்டும். அதுவும் இந்த வெயில் சமயத்தில் நீண்ட நேரம் கிட்சனில் நிற்கவும் முடியாது. அந்த வகையில் குக்கரில் சீக்கிரமாக செய்யும் வகையில் மட்டன் தொக்கு ரெசிபியை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆட்டுக் கறி - 1 கிலோ
கடலை எண்ணெய் - 40 ml
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 3
ஸ்டார் பூ- 2
பிரிஞ்சு இலை - 1
சோம்பு - 1/2 Tsp
சின்ன வெங்காயம் - 15
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 Tsp
தக்காளி - 2
மஞ்சள் பொடி - 1 Tsp
மிளகாய் பொடி - 1 Tsp
மிளகு பொடி - 1/2 Tsp
உப்பு - தே.அ
மட்டன் குழம்பு பொடி - 3 1/2 Tsp
தண்ணீர் - 2 கப்
முந்திரி - 10
கசகசா - 3/4 Tsp
கரம் மசாலா - 1/2 Tsp
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, இலை போட்டு வதக்குங்கள். பின் சோம்பு போட்டு பொறிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மட்டனை சேர்த்து அதோடு மஞ்சள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து பிறட்டுங்கள். மசாலா நன்கு சேர வேண்டும்.
அடுத்ததாக மிளகுப் பொடி, மட்டன் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்துப் பிறட்டி தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். அடுத்ததாக குக்கரை மூடிவிட்டு ஐந்து விசில் விடுங்கள்.
அதற்கிடையே முந்திரி மற்றும் கசகசாவை மைய அரைத்துக்கொள்ளுங்கள். விசில் வந்ததும் குக்கரைத் திறந்து மீண்டும் அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து குழம்பை கொதிக்க வையுங்கள்.
முட்டை ஊற்றி முருங்கைக் கீரை பொரியல் எப்படி செய்வது..? ரெசிபி இதோ...
ஒரு கொதி வரும் போது அரைத்த முந்திரி பேஸ்டை சேருங்கள். 5 நிமிடங்களுக்குக் கொதித்ததும் இறுதியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் சுவையான மட்டன் குழம்பு தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.