ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தோசை மீந்துருச்சா..? கவலை வேண்டாம்.. 5 நிமிடத்தில் கொத்து தோசை ரெசிபி.!

தோசை மீந்துருச்சா..? கவலை வேண்டாம்.. 5 நிமிடத்தில் கொத்து தோசை ரெசிபி.!

கொத்து தோசை

கொத்து தோசை

தோசை இருக்கிறது ஆனால் தொட்டு சாப்பிட சட்னி சாம்பார் இல்லை என்கிறவர்களுக்கு இந்த கொத்து தோசை ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தோசை பிடிக்காதவர்களை நம்மால் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது. இட்லியை விரும்புவர்களைக் காட்டிலும் தோசை விரும்பிகளே அதிகம். பொதுவாக தோசைக்கு சட்னி சாம்பார் தொட்டு சாப்பிடுவது வழக்கம். மிஞ்சி போனால் பொடியை தொட்டு சாப்பிடுவோம். அப்படி சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் சரி, தோசை இருக்கிறது ஆனால் தொட்டு சாப்பிட சட்னி சாம்பார் இல்லை என்கிறவர்களுக்கு இந்த கொத்து தோசை ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

கொத்து தோசை செய்ய தேவையான பொருட்கள்:

கனமான தோசை - 4

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

நறுக்கிய தக்காளி - 2

நறுக்கிய பச்சை மிளகாய் - 2

முட்டை - 2

புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு

கறிமசால்த்தூள் - ஒரு ஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும், பின்னர் அதில் தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா போட்டு வதக்கவும். இத்துடன் தோசையை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்துப் போட்டு வதக்கவும்.

ஒரு பாத்திரத்தில் உப்பு, முட்டை, மிளகாய்த்தூள், கறிமசாலாத்தூள் போட்டுக் கலக்கி வைத்துக்கொண்டு வதக்கி வைத்துள்ள தோசையின் மீது ஊற்றிக் கொத்தி விட்டால் கொத்து தோசை ரெடி!

கூடுதல் குறிப்பு : புளிப்பு சுவையை விரும்புவோர் அடுப்பை அனைத்தவுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிடலாம். மேலும் இந்த தோசையில் மீதமிறுக்கும் வறுத்த / பெப்பர் சிக்கனை கூட சேர்த்து கிளறி சாப்பிடாலாம். சிக்கன் கொத்து பரோட்டாவிற்கு இணையான சுவையில் இருக்கும்.

First published:

Tags: Dinner Recipes, Dosa