ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஓவனில் 10 நிமிடத்தில் தால் ஃப்ரை செய்ய முடியுமா..? உடனே டிரை பண்ணுங்க..!

ஓவனில் 10 நிமிடத்தில் தால் ஃப்ரை செய்ய முடியுமா..? உடனே டிரை பண்ணுங்க..!

தால் ஃப்ரை

தால் ஃப்ரை

இந்த தால் ஃபரையை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை என பெரும்பாலான உணவுடன் சைடாக சாப்பிட ஏற்றதாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு ஸிம்பிள் அண்ட் சூப்பரான ரெசிபி இதோ..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புரதமும் சுவையும் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் பருப்பு. முக்கியமாக வெஜிடேரியன்ஸ் எப்பொழுதும் விருப்பி சாப்பிடும் உணவாக எப்போதுமே சாம்பார் இருக்கும். அதே சமயம் சாம்பார் செய்ய நேரமில்லை அல்லது போர் அடித்து விட்டது என நினைப்பவர்கள் தால் ஃப்ரை செய்து சாப்பிடுவது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

அதற்கும் நேரமில்லை என நினைப்பவர்கள் ஓவனில் 15 நிமிடத்தில் சட்டென செய்துவிட முடியும். இந்த தால் ஃபரையை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை என பெரும்பாலான உணவுடன் சைடாக சாப்பிட ஏற்றதாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு ஸிம்பிள் அண்ட் சூப்பரான ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள் :

வேகவைத்த சிறுபருப்பு - 150 கிராம்

சீரகம் - 1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்

இரண்டாக கீறின பச்சைமிளகாய் - 4

வெங்காயம் - 1 கப்

தக்காளி - 1/2 கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/4 கட்டு

உப்பு - தேவைக்கேற்ப

மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை : 

முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் நெய்யுடன் சீரகத்தை போட்டு 5 நிமிடம் 180 டிகிரி செல்சியஸில் ஓவனில் வைக்கவும்.

பின்பு திறந்து அதனுடன் வேகவவைத்துள்ள பருப்பையும் போட்டு கொஞ்சம் தண்ணீர் மற்றும் உப்பு போட்டு நன்றாக கலக்கி மீண்டும் 10 நிமிடம் 175 டிகிரி செல்சியஸில் ஓவனில் வைக்கவும்.

பின்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி சூடாக பரிமாறவும்.

Also Read : இரவு டின்னருக்கு சப்பாத்தியுடன் இந்த வெண்டைக்காய் மசாலாவை செய்து பாருங்க.. சுவை அப்படி இருக்கும்.!

கூடுதல் குறிப்பு :

பருப்பு டப்பாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்கு ஈரத்தன்மை இல்லாத வெயிலில் காயவைத்த மஞ்சள் கிழங்கு, பூண்டுப்பல் அல்லது வேப்பிலையை பருப்புடன் போட்டு வைத்தால் வண்டு, பூச்சி எதுவும் வராது.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Microwave, Vegetarian