நாட்டில் மழைக்காலம் துவங்கி இருக்கும் நிலையில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பருவகால நோய்கள் அதிகரித்து வருகின்றன. மழை சீசனில் ஆரோக்கியமாக இருக்க சிலர் இரவில் மஞ்சள் கலந்த பாலை குடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
மஞ்சள் பல நோய்கள் மற்றும் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அழகான சருமத்தை வழங்குகிறது. மஞ்சள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, நம் கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. நீங்களும் கூட மழை சீசனில் மஞ்சள் கலந்த பால் குடித்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் எப்போதாவது மஞ்சள் டீ (Haldi Chai) குடித்திருக்கிறீர்களா.?
சமீபத்திய ஆண்டுகளில் மஞ்சள் டீ அதன் நீண்ட ஆரோக்கிய நன்மைகளுக்காக பிரபலமடைந்து வருகிறது. இதை தயாரிக்க மஞ்சள், இஞ்சி, கருமிளகு, தேன் உள்ளிட்ட பொருட்கள் தேவை. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு அதை சுட வைத்து தேன் தவிர மற்ற பொருட்களை அதில் சேர்த்து, தண்ணீர் பாதியாக சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைத்து, பின் அதில் தேன் கலந்து சூடாக குடிக்கலாம்.
மஞ்சள் கலந்த டீ-யை உட்கொள்வதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்...
அழற்சி அபாயத்தை குறைக்கும்:
ஒரு டீஸ்பூன் அரைத்த மஞ்சளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கப் மஞ்சள் டீ-யில் 8 கலோரிகள், 1 கிராம் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் பி3, பி6, சி, தாமிரம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், ஃபிளாவனாய்டுகள், பீட்டா கரோட்டின், குர்குமின் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. எனவே மஞ்சள் டீ பல வகையான நாட்பட்ட நோய்கள் மற்றும் அழற்சி அபாயத்தை குறைக்கின்றன.
பருவகால நோய்களை தடுக்க வேம்பு டீ தயாரிப்பது எப்படி..? நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க...
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்:
மஞ்சள் டீ-யில் இருந்து பெறப்படும் குர்குமின் எல்டிஎல் கொலஸ்ட்ரால் (கெட்ட கொலஸ்ட்ரால்) மற்றும் மொத்த கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். Coronary artery bypass சர்ஜரிக்கு முன்னும் பின்னும் குர்குமின் எடுத்து கொள்வது மாரடைப்பு அபாயத்தை கணிசமாக குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி:
மஞ்சளில் காணப்படும் குர்குமின் என்ற கலவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களை தடுக்க உதவுகிறது.
புற்றுநோய் அபாயத்தை தடுக்கும்:
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள மஞ்சள் தோல், குடல், மார்பகம், வயிறு புற்றுநோய்களை தடுக்க உதவுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவது உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
பெண்கள் குங்கமப்பூ தண்ணீர் குடித்து வந்தால் இந்த பிரச்சனைகளை இருக்காதா..!!
நீரிழிவு அபாயங்களை குறைக்கிறது..
மஞ்சளில் உள்ள குர்குமின் ரத்த சர்க்கரை அளவையும் குறைப்பதாக சில ஆய்வுகள் காட்டுகின்றன. பருவமழை காலத்தில் மஞ்சள் டீ குடிப்பதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். குர்குமின் இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. நீரிழிவு நோயில் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் பொதுவானவை, எனவே மஞ்சள் டீ குடிப்பதன் மூலம் அதை தவிர்க்கலாம்.
அஜீரணத்தை தடுக்கிறது:
மஞ்சளில் உள்ள குர்குமின் உணவுக்குழாய் அழற்சியைத் தடுக்கிறது. அசிடிட்டி, அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் உள்ளிட்டவற்றை தடுக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy Lifestyle, Herbal Tea, Turmeric