Home /News /lifestyle /

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் நபரா..? அதனால் வரும் பிரச்சனைகளையும் தெரிஞ்சுக்கோங்க...

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் நபரா..? அதனால் வரும் பிரச்சனைகளையும் தெரிஞ்சுக்கோங்க...

டீ

டீ

மருத்துவர்களின் கருத்துபடி, டீயில் பல ஆரோக்கியமான நன்மைகளை தரக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதாகவும், அவை நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்றும் கூறுகின்றனர். ஆனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
காலையில் எழுந்ததுமே டீ அல்லது காஃபி கப் முன்பு கண்விழித்தால் மட்டுமே நம்மில் பலருக்கும் அந்த நாள் இனிய நாளாக அமையும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக தினமும் 5 முதல் 6 கோப்பைகள் வரை தேநீர் குடிப்பவர்களும் உண்டு. வீட்டிற்கு உறவினர்கள் வந்தாலும் சரி... நண்பர்களுடன் ஜாலியாக வெளியே சென்றாலும் சரி... நாம் கேட்கும் முதல் கேள்வி ‘டீ வேணுமா?’ என்பதாக தான் இருக்கும். அந்த அளவுக்கு தேநீர் நம் வாழ்வுடன் இரண்டற கலந்துவிட்டது.

நம்மில் பெரும்பாலானோருக்கு படுக்கையில் இருந்து எழுந்ததும் பல் துலக்குகிறோமோ இல்லையோ ஆவி பறக்க டீ குடித்தே ஆக வேண்டும். அப்படி காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவது நல்லதா?, அதனால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என விளக்கியுள்ளோம்.

மருத்துவர்களின் கருத்துபடி, டீயில் பல ஆரோக்கியமான நன்மைகளை தரக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதாகவும், அவை நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்றும் கூறுகின்றனர். ஆனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கின்றனர். வெறும் வயிற்றில் டீ அருந்துவதால், அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.



1. தலைவலி:

தலைவலியை குறைக்க ஒரு கோப்பை சூடான தேநீர் சிறப்பாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், தேநீரில் உள்ள காஃபின், நீங்கள் அதனை குடித்த பிறகு வலியை அதிகரிக்க செய்யவும் வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க இரவு தூங்கச் செல்லும் முன்பு நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.

உணவில் அதிக உப்பு சேர்ப்பவரா நீங்கள்..? உங்களுக்கு ஆயுள் குறைவு... ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

2. அஜீரணம் மற்றும் நீரிழப்பு:

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பெட் டீ அல்லது பெட் காபி குடிப்பது, வயிற்றில் செரிமான பிரச்சனைகளை உருவாக்கும். டீயில் டையூரிடிக் கூறுகள் உள்ளன. இது சிறுநீர் கழிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இதனால் உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது.

3. ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கும்:

தேநீரில் டானின் என்ற ஒரு தனிமம் உள்ளது, இது நமது செரிமான அமைப்பானது உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதை தடுக்கிறது. அதேபோல் காஃபினும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது.



4. அசிடிட்டி:

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தேநீர் பருகுவது, அமில மற்றும் காரத்தன்மையில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தி அசிடிட்டியை உருவாக்கிறது. இந்த அமிலத் தன்மை காரணமாக நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் அனுபவிக்க நேரலாம். பெட் டீ குடிப்பது, செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தையும் பாதிக்கிறது.

பகலில் குட்டித் தூக்கம் போட்டால் ஸ்டிரோக் ஏற்பட வாய்ப்பு : அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிப்பதற்கு பதிலாக நட்ஸ் வகைகளை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்த தேநீரை, காலை டிபனுக்குப் பிறகு பருகுவது நல்லது. இது ஆரோக்கியமானது மட்டுமின்றி, வெல்லம் மூலமாக பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கவும் உதவும். மேலும் பிற்பகல் 3 மணிக்கு தேநீர் பருவது, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் மற்றும் காய்ச்சல் மற்றும் சளி வராமல் வராமல் தடுக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Empty stomach, Tea

அடுத்த செய்தி