வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பலரும் உடலுக்கு குளுமை தரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வழக்கமாக தினமும் சாப்பிட்டு வருகின்றனர். வெயில் காலத்தில் பல்வேறு தர்பூசணி போன்ற பழங்களுக்கு மத்தியில் வெள்ளரிக்காய்களின் விற்பனையும் அமோகமாக இருக்கும். உலகம் முழுவதும் பல காரணங்களுக்காக மக்களால் வெள்ளரிகள் அதிகம் விரும்பப்படுகின்றன. சிலர் இதை சாலட்டாக உட்கொள்கிறார்கள். மலிவான விலையில் கிடைக்கும் என்பதால் பலரும் அடிக்கடி வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள்.
வைட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்த வெள்ளிரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பல. ஆனால் இதை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. இன்னும் குறிப்பாக சொன்னால் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை. மாறாக இது முற்றிலும் நீங்கள் எடுத்து கொள்ளும் வெள்ளரிக்காய்களின் எண்ணிக்கை மற்றும் நீங்கள் நீர்சத்து மிக்க இந்த காயை உட்கொள்ளும் நேரத்தைப் பொறுத்தது.
வெள்ளரிக்காயை இரவு நேரத்தில் சாப்பிட்டால் என்ன ஆகும்..?
எந்த சீசனாக இருந்தாலும் இரவு நேரங்களில் ஒருபோதும் வெள்ளரிக்காயை சாப்பிட வேண்டாம் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். இரவில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்றும் சொல்வார்கள். இது அவரவர் உடல் அமைப்பை பொருத்தது. ஆனால் இரவில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியமான உடலை கொண்டவராக இருந்தாலும் தூக்க சுழற்சியை பாதிக்கும் என்பது அறிவியல் காரணம்.
வெள்ளரிகள் நிறைந்த ஹெவி டிஷ் ஒன்றை நீங்கள் சாப்பிடும்போது, அந்த உணவை சீக்கிரம் ஜீரணிக்க இயலாது எனபதே இதன் பின்னணியில் கூறப்படும் காரணம். இது உங்கள் இரவு தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். எனவே இரவில் வெள்ளரிக்காயை சாப்பிடுவதாக இருந்தால், தூங்கச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பிடுவது தூக்கத்தை தொந்தரவு செய்யாது.
நீரிழப்பு ஏற்படலாம் : வெயிலில் அலைந்து திரியும் போது உடலில் நீரிழப்பு ஏற்பட கூடாது என்பதற்காக தான் முக்கியமாக வெள்ளரிக்காயை சாப்பிடுகிறோம். இது எப்படி நீரிழப்பை ஏற்படுத்தும் என்று யோசிக்கலாம். எதையுமே அளவாக உட்கொள்ள வேண்டும் என்பதை இதன் மூலம் வெள்ளரிக்காய் அருமையாக நமக்கு உணர்த்துகிறது. வெள்ளரி விதையில் இருக்கும் மூலபொருளான குக்குர்பிட்டின், டையூரிடிக் எனற பணப்பை கொண்டுள்ளது. இது அளவுக்கு அதிகமாக நம் உடலில் சேரும் போது சமநிலை பாதிக்கப்பட்டு நீரிழப்பு ஏற்படுகிறது.
Also Read : சுண்டைக்காய் தரும் 5 நன்மைகளை மறக்காம தெரிஞ்சுக்கோங்க..!
வயிற்று பிரச்னை : ஏற்கனவே செரிமான பிரச்னை உள்ளவர்கள் சரியான அளவு வெள்ளரிக்காய்களை மட்டுமே சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் வெள்ளரி விதையிலிருக்கும் குக்குர்பிட்டின், அவர்களது ஜீரண மண்டலம் செய்யக்கூடிய செரிமான செயல்முறையை பாதித்து, வாயு மற்றும் வயிறு உப்புவது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சைனஸ் தொல்லை : உடலுக்கு குளுமை தரக்கூடிய வெள்ளரியை நாள்பட்ட சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்ட பிறகு சாப்பிடுவதே நல்லது. அவசரப்பட்டு ஆசையாக இருக்கிறதென்று கொஞ்சம் வெள்ளரி சாப்பிட்டாலே சைனஸ் தொல்லை அதிகரித்து விடும். பின் மருத்துவரை பார்க்கும் நிலை வரலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cucumber, Side effects