சீஸ் எனும் பாலாடைக்கட்டியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார்கள் . பாலாடைக்கட்டி என்பது பாலிலுள்ள புரதமான கேசீனை உறைய வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது கடைகளில் பல்வேறு வடிவங்களிலும் சுவைகளிலும் கிடைக்கிறது. பாலாடைக் கட்டி வெண்ணெயை விட அதிக வைட்டமின்கள் மற்றும் மினரல்களைக் கொண்டுள்ளது.
100 கிராமில் பாலாடைக்கட்டியில் 349கி கலோரிகள் உள்ளன. சீஸ், பர்கர் முதல் கேக் வரை பலவிதமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது, எனினும் சீஸ் உட்கொள்ளல் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். பாலாடைக்கட்டி ஒரு சிறிய அளவு லாக்டோஸைக் கொண்டிருப்பதால், முன்னெச்சரிக்கையாக குறைவாக உட்கொள்வது நல்லது. அதிகப்படியான சீஸ் சாப்பிடுவதால் ஏற்படும் 5 பக்க விளைவுகள் குறித்து இங்கு காண்போம்.,
பாலாடைக்கட்டியின் பக்க விளைவுகள்:
உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது
சீஸ் இயற்கையானது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. சீஸ் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்றாலும் அதில் பல்வேறு செயற்கை பொருட்கள் சேர்க்கப்படுகிறது. எனவே சீஸ் அதிகமாக உட்கொள்ளும் போது உடல் ஆரோக்கியம் பாதிக்கிறது. மேலும் நீண்ட கால பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
நீரிழப்பு:
போதுமான தண்ணீர் குடிக்காமல் இருந்தால் விரைவில் நீரிழப்பு ஏற்படும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் சீஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவதாலும் நீரிழப்பு ஏற்படும். ஏனெனில் இதில் அதிக அளவிலான சோடியம் நிறைந்துள்ளது என்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சீஸ் அதிக சோடியம் நிறைந்த உணவாகும், நிபுணர்களின் கூற்றுப்படி அதிகளவிலான சீஸ் உட்கொள்ளல் நீரிழப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறைத்த அளவு உட்கொள்வது நல்லது.
குழந்தைகள் எப்போதும் மேகி கேட்கிறார்களா..? அதை ஆரோக்கியமானதாக மாற்றும் ரெசிபீஸ் இதோ...
இரைப்பை பிரச்சனைகள்:
சீஸ் போன்ற பால் பொருட்களில் லாக்டோஸ் நிறைந்துள்ளது. சீஸ் அதிகமாக உட்கொண்டால் அது உடலால் உறிஞ்சப்படுவதற்கு பதிலாக பெருங்குடலில் வந்து சேரும். இது செரிமான பிரச்சனைகள் மற்றும் இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் அதிகப்படியான சீஸ் சாப்பிட்ட உடனேயே வாயுத்தொல்லை ஏற்பட்டால் உங்களுக்கு சீஸ் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என அறிந்துகொள்ளுங்கள்.
கொலஸ்ட்ரால்:
சீஸில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது, எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் இருந்தால் அதனை அறவே தவிர்த்து விடுவது நல்லது. ஆரோக்கியமான உணவைப் பராமரிக்கவும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் விரும்புபவர்கள் சீஸ் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
எடை அதிகரிப்பு:
சீஸில் 'குறைந்த அளவிலான கார்ப், 'அதிக அளவிலான புரதம்' நிறைந்துள்ளது என பலரும் நினைக்கின்றனர். எனவே அதிகளவிலான சீஸை சாலட்டுகள், ஆம்லெட்கள், சாண்ட்விச்சுகள் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடுகின்றனர். ஆனால் சீஸ் நமது உடல் எடையை அதிகரிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சீஸ் சாப்பிடுவதை அறவே தவிர்த்து விடுவது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheese, Side effects