ஊட்டச்சத்துக்களின் பவர்ஹவுஸ் மற்றும் ஆரோக்கியமான உணவின் இன்றியமையாத அங்கமாக இருக்கின்றன பழங்கள். ஆரோக்கியத்தின் ஊற்றாக கருதப்படும் பழங்களை கட்டுப்பாடுகளை சிலர் வைத்து கொள்கிறார்கள். சிலர் இரவு நேரங்களில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க பரிந்துரைக்கிறார்கள்.
ஒரு சிலர் காலை நேரமே பழங்களை சாப்பிட சிறந்த நேரம் என்று கூறி காலை நேரத்தில் முதல் உணவாக பழங்களை சாப்பிடுவதை பரிந்துரைக்கிறார்கள் சிலர் தவிர்க்க சொல்கிறார்கள். அதே போல உணவுக்கு முன் அல்லது பின் பழங்களை சாப்பிடுவது அதன் ஊட்டச்சத்து மதிப்பைக் குறைக்கும் என்றும் சிலர் சொல்வார்கள். நம்மில் பலருக்கும் எழும் முக்கியமான கேள்வி பழங்களை சாப்பிடுவதற்கென்று குறிப்பிட்ட அல்லது சரியான நேரம் என்று உள்ளதா..? பழங்களால் கிடைக்கும் முழு பலன்களையும் பெற குறிப்பிட்ட நேரங்களில் தான் அவற்றை சாப்பிட வேண்டுமா என்பது தான். இது பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் மோஹிதா குப்தா கூறும் விஷயங்களை இங்கே பார்க்கலாம்...
மோஹிதா குப்தா தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில் கூறி இருப்பதாவது, "மதியம் 2 மணிக்கு மேல் மாம்பழம் சாப்பிட வேண்டாம் என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் மாலை 4 மணிக்கு பிறகு சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறார்கள். மதியம் அல்லது மாலை நேரத்திற்கு பிறகு பழங்கள் சாப்பிடுவது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் அஜீரணத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் ரத்தச் சர்க்கரை குறைவு மற்றும் நீரிழிவு நோயை உண்டாக்கும் என்று அடித்து சொல்கிறார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கென்று தனிப்பட்ட தியரி இருப்பதாக தெரிகிறது. ஆனால், இந்த கூற்றுகள் எதுவும் உண்மை இல்லை" என்று குறிப்பிட்டு உள்ளார்.
View this post on Instagram
மேலும் இவர் தனது போஸ்ட்டில், மாம்பழம் மற்றும் பிற பழங்களை உண்பதற்கான சிறந்த நேரம் பற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன. ஆனால் இவற்றை ஆதரிக்க சிறிய அறிவியல் ஆதாரம் உள்ளது. மாலை அல்லது இரவு நேரங்களில் பழங்களை உண்பதால் அதிலிருக்கும் கலோரிகளில் இரட்டிப்பாகாது அல்லது இரவில் அதே பழம் விஷமாக மாறாது. எனவே பயப்படுவதை நிறுத்துங்கள். ஒரு நாளின் எந்த நேரத்திலும் பழங்களை சாப்பிடுவது நல்லது என்றாலும், தூங்க செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன் பழங்கள் அல்லது எந்த உணவையும் சாப்பிட்டு முடிக்க பரிந்துரைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
சமைத்த பிறகு ஊட்டச்சத்து மிகுந்ததாக மாறும் 5 காய்கறிகள்... வாரம் ஒன்று சாப்பிடுங்கள்...
ஏன் பழங்கள் சாப்பிட வேண்டும்?
பழங்கள் உடலுக்கு பல பயனுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துகளை வழங்குகின்றன. அவை ஆரோக்கியமான உணவின் இன்றியமையாத பகுதியாகும். நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக இருப்பதைத் தவிர, பழங்களில் பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்று கூறி உள்ளார் குப்தா.
தூங்க செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன் எந்த உணவையும் சாப்பிட சொல்ல காரணம்.?
படுக்கைக்கு செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே பழங்கள் அல்லது பிற உணவுகளை சாப்பிட்டு முடித்து விடுவது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை பெற உதவும் என்றும் குறிப்பிட்டு உள்ளார் ஊட்டச்சத்து நிபுணர் மோஹிதா குப்தா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fruits