ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

துளசி இலைகளை ஏன் முழுவதுமாக மென்று சாப்பிட கூடாது..? அறிவியல் காரணம் இதுதான்..!

துளசி இலைகளை ஏன் முழுவதுமாக மென்று சாப்பிட கூடாது..? அறிவியல் காரணம் இதுதான்..!

துளசி

துளசி

துளசியில் காணப்படும் அத்தியாவசிய எண்ணெய்கள், நமது சுவாச மண்டலத்தில் திறம்பட செயல்படுகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று புதிய துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் நம் நாளை தொடங்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

துளசி இலைகள் புனிதமானது மற்றும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட ஒரு அற்புத மந்திர மூலிகையாக கருதப்படுகிறது. துளசி பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. தினமும் சிறிதளவு துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது முன்னோர்கள் மற்றும் நியுணர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் படி, கசப்பான மற்றும் சிறிது துவர்ப்பு தன்மை கொண்ட துளசி இலைகள் இயற்கையின் சிறந்த ஆன்டிபயாடிக் ஆகும். துளசியில் காணப்படும் அத்தியாவசிய எண்ணெய்கள், நமது சுவாச மண்டலத்தில் திறம்பட செயல்படுகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று புதிய துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் நம் நாளை தொடங்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனுடன் துளசி இலைகளை மெல்லாமல் விழுங்க வேண்டும் என்ற அறிவுரையும் கூடவே வருகிறது.

மகத்தான மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி இலைகளை மெல்லுவது சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மேலும் துளசி இலைகளை மென்று விழுங்கலாமா என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. எனினும் துளசியை முழுவதுமாக மென்று சாப்பிடுவது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. துளசி இலைகளை மென்று சாப்பிட கூடாது என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணம், துளசி இலைகளில் அதிக அளவு பாதரசம் (mercury)மற்றும் இரும்புச்சத்து உள்ளது. துளசி இலைகளை மெல்லும் போது அவை வெளிப்படும். எனவே துளசி இலைகளை நன்றாக மென்று சாப்பிடுவது நம் பற்களை கறைபடுத்தும் மற்றும் நம் பற்களில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதாக இருக்கிறது.

துளசி இலைகளை முழுவதுமாக மெல்லுவதை விட லேசாக மென்றோ அல்லது முழுவதுமாக விழுங்கவோ பரிந்துரைக்கப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகி உள்ள அறிக்கையின்படி, துளசி இலைகள் அமிலத்தன்மை கொண்டவை மற்றும் நம் வாய் காரத்தன்மை கொண்டது. எனவே துளசியை மெல்லுவது நம் பற்களின் எனாமலில் தேய்மானத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு உள்ளது.

PCOD கோளாறை எளிதாக நிர்வகிக்க உதவும் உணவு பழக்கங்கள் என்ன..? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!

மருத்துவ குணங்கள் கொண்ட துளசி இலைகளை சாப்பிடுவதற்கான பாதுகாப்பான வழிகள்:

* துளசி டீ:

நீங்கள் வழக்கமாக துளசி சாப்பிட விரும்பினால், அதை உங்கள் டீ-யில் சேர்ப்பதே சிறந்த மற்றும் எளிய வழி. கொதிக்கும் நீரில் துளசியை சேர்த்து மேலும் மூலிகைகள் மற்றும் சுவைகளை சேர்த்து டீ-யாக தயாரித்து குடிக்கலாம். ¼ கப் துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். முதல் கொதிக்கு பிறகு, வெப்பத்தை குறைத்து, சுமார் 10 நிமிடங்கள் காய்ச்சவும். 1 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டவும். உயர் ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு துளசி நன்மை பயக்கும்.

* துளசி ஜூஸ்:

ஒரு கப் தண்ணீருடன் தேவையான அளவு துளசி இலைகளை சேர்த்து சில மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும். பின் அந்த தண்ணீரை வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Tulsi