Home /News /lifestyle /

கோடைக்காலத்தில் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட கூடாதா..?

கோடைக்காலத்தில் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட கூடாதா..?

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கரு

ஆரோக்கியமான, சரிவிகித உணவை உட்கொள்ள எண்ணும் அனைவருக்கும் முட்டையில் உள்ள பொதுவான சத்துக்கள் பற்றி நன்கு தெரியும்.

ஆரோக்கியமான, சரிவிகித உணவை உட்கொள்ள எண்ணும் அனைவருக்கும் முட்டையில் உள்ள பொதுவான சத்துக்கள் பற்றி நன்கு தெரியும். வைட்டமின் டி, வைட்டமின் பி, துத்தநாகம், கால்சியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களின் சங்கமமான முட்டை மலிவு விலையில் கிடைப்பது மற்றொரு சிறப்பாகும். இதன் ஊட்டச்சத்து மதிப்பைத் தவிர சல்பர் மற்றும் அமினோ அமில உள்ளடக்கம் காரணமாக முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, இது ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ஆனால் முட்டை சாப்பிடுவதால் உடல் வெப்ப நிலை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் கோடை காலத்தில் அதனை சாப்பிடக்கூடாது என்ற தவறான கருத்தும் உலவி வருகிறது. மேலும் முட்டை இது நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்ற மற்றொரு கட்டுக்கதையும் உள்ளது. மற்றொரு கட்டுக்கதை என்னவென்றால், முட்டைகளை உட்கொள்வது இதய நோய்களுக்கு வழிவகுக்கும், குறிப்பாக கோடை காலத்தில் முட்டைகளை சாப்பிடுவது அல்லது தவிர்ப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உண்மையான விஷயங்களை நாங்கள் உங்களுக்கு விளக்கியுள்ளோம்.

நிபுணர்கள் சொல்வது என்ன?

கோடை காலத்தில் மிதமான அளவிற்கு முட்டைகளை உட்கொள்வது பாதுகாப்பானது என ஆராய்ச்சியாளர்களும் உணவியல் நிபுணர்களும் உறுதியாக தெரிவித்துள்ளனர். முட்டைகள் உடலில் வெப்பத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை என்பது உண்மைதான் என்றாலும், மிதமான அளவு உட்கொள்வது ஆரோக்கியமானது மற்றும் இந்த சூப்பர் ஃபுட் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும்.

ஒரு ஆய்வின் படி, கோடை காலத்தில் முட்டைகளை சாப்பிடுவது, சாதாரண நீரிழிவு நோய் அல்லது டைப் 2 நீரழிவு நோய்களைக் கொண்டவர்களுக்கு இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.



முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவது பாதுகாப்பானதா?

எடை பராமரிப்பாளர்கள் இடையே உள்ள மற்றொரு மிகப்பெரிய சந்தேகம் முட்டையின் மஞ்சள் கருவோடு சேர்த்து முழு முட்டையையும் சாப்பிடலாமா என்பது தான். முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் முட்டையின் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து 90 சதவீதம் உள்ளது, அதே சமயம் வெள்ளைப் பகுதியில் முட்டையின் புரதத்தில் பாதி உள்ளது. பல உடற்பயிற்சி ஆர்வலர்கள் முட்டையின் மஞ்சள் கருவை விட வெள்ளைப் பகுதியை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று கருதுகின்றனர்.

மீன் சாப்பிட்டால் தோல் புற்றுநோய் வருமா..? ஆய்வில் வெளியான உண்மை..!

ஆனால் கோடை காலத்தில் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவது நல்லது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் நிறைந்துள்ளது, முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் உடலுக்குத் தேவையான பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மஞ்சள் கருவில் இரும்பு, ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் போன்ற முட்டைகளின் பெரும்பாலான நல்ல பொருட்கள் உள்ளன. இதில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் உள்ளது - இவை ஆரோக்கியமான கண்கள் மற்றும் மூளைக்கு நல்லது.



கோடையில் முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் என்று நிரூபிக்கப்பட்ட அறிவியல் தரவு எதுவும் இல்லை. மேலும், சுகாதார ஆர்வலர்களின் கவனம் ஆரோக்கியமான உணவு முறைகளில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட உணவு அல்லது ஊட்டச்சத்துக்கள் இருக்க கூடாது என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முட்டையின் மஞ்சள் கருக்களின் விளைவுகள் குறித்து கவலைகள் இருந்தாலும், ஒரு சில ஆய்வுகள் முட்டையின் மஞ்சள் கருவை அதிக அளவில் உட்கொள்வது டைட் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. எனவே, எப்போதும் ஆரோக்கியமான அளவோடு இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Egg, Egg Yolk

அடுத்த செய்தி