ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பூசணி விதை : இன்னும் என்னென்ன நன்மைகள் இருக்கு..?

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது இதயத்தின் இயக்கம் , இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

  • Share this:
மருத்துவரை நாட வேண்டும் என்கிற நிர்பந்தம் வராத வரை தங்கள் உடல் நலனில் யாரும் பெரிதாக அக்கறை கொள்வதில்லை. குறிப்பிட்ட வயதை தாண்டிய உடனே நம் உடல் நலனில் நாம் சுயநலமாக இருப்பது அவசியம். அதாவது ஆரோக்கிய கேடுகளில் சமரசம் செய்துகொள்ளாமல் ஆரோக்கியமான உணவு , உடற்பயிற்சி , நல்ல தூக்கம் , மன அமைதி இப்படியான வாழ்க்கை உங்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

குறிப்பாக ஆண்கள் தங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் அக்கறை செலுத்துவதை முதன்மை நோக்கமாக பின்பற்ற வேண்டும். அந்த வகையில் ஆண்களின் ஆரோக்கிய நண்பன் என்று அழைக்கப்படும் பூசணி விதைகளை தினசரி உட்கொள்வதால் பல நன்மைகளை பெற முடியும். இதை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.

புரோஸ்டேட் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது : பூசணி விதை பல ஆரோக்கிய நன்மை பயக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது. இந்திய ஜர்னல் ஆஃப் யூரோலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பூசணி விதை உட்கொள்வது புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ஆண் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இது பொதுவாக புரோஸ்டேட் சுரப்பியை வலுப்படுத்தவும், ஆண்களில் ஆரோக்கியமான ஹார்மோன் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது.பூசணி விதைகளை உட்கொள்வது தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளேசியா (பிபிஹெச்) க்கு உதவக்கூடும். சிறுநீர் கழிப்பதில் உண்டாகும் பிரச்சனைகளை சரி செய்ய உதவும். அதோடு பூசணி விதைகளை தவறாமல் உட்கொள்வது BPH தொடர்பான அறிகுறிகளைக் குறைக்க உதவும் என்று பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆண் கருவுறுதலை மேம்படுத்துகிறது : பூசணி விதைகளில் காணப்படும் ஸிங்க் ஆண்களுக்கு பல வகைகளில் நன்மை சேர்க்கின்றன. குறைவான விந்து தரம் மற்றும் ஆண்களில் மலட்டுத்தன்மை கூட ஸிங்க் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். தினசரி உணவில் இந்த விதைகளைச் சேர்ப்பது ஒட்டுமொத்த விந்தணு தரத்தை மேம்படுத்த உதவும். டி.கே பதிப்பகத்தின் 'ஹீலிங் ஃபுட்ஸ்' புத்தகத்தின் படி, பூசணி விதைகள் ஆண்களின் கருவுறுதலை ஊக்குவிப்பதற்கும், புரோஸ்டேட் பிரச்சனைகளைத் தடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பது ஆரோக்கியமான டெஸ்டோஸ்டிரோன் அளவையும் மேம்படுத்த உதவும்.

புரோட்டீன் அதிகரிப்பு : பூசணி விதைகளில் புரதம் நிறைந்துள்ளது. இது தசைகளின் உறுதித் தன்மைக்கு அவசியம். யுனைடெட் ஸ்டேட்ஸ் வேளாண் துறையின் (யுஎஸ்டிஏ) ஊட்டச்சத்து விளக்கப்படத்தின் படி 100 கிராம் பூசணி விதைகளில் சுமார் 23.33 கிராம் புரதம் உள்ளது. எனவே உணவிலோ அல்லது ஸ்நாக்ஸாக அப்படியேவும் சாப்பிடலாம்.பூசணி விதைகளில் இயற்கை எண்ணெயும் நிறைந்துள்ளது. ஆனால் அதிக விதைகளை சாப்பிடுவது உங்களை கொழுப்பை அதிகரிக்குமோ என்ற பயம் இருந்தால் நிச்சயம் இல்லை. "கொட்டைகள் மற்றும் விதைகளின் அதிக எண்ணெய் இருப்பதன் காரணமாக, கொட்டைகள் மற்றும் விதைகளை அடிக்கடி உட்கொள்வது உடல் பருமன் விகிதத்தை அதிகரிக்கும் என்று சந்தேகிக்கலாம். ஆனால் 26,000 அமெரிக்கர்களை வைத்து நடத்திய ஆய்வில் அதிக கொட்டைகள் மற்றும் விதைகளை உட்கொள்ளும் மக்கள் உடல் பருமன் அற்றவர்களாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

பூசணி விதைகளில் ஸிங்க் அதிகம் இருப்பதால், அவை செல்களைப் புதுப்பித்தல், சருமச் சேதத்தை சரிசெய்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை செய்கிறது.

Nutrition alert : பருப்பு, நட்ஸ்களை ஊற வைத்துதான் சாப்பிடுகிறீர்களா..?

பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது இதயத்தின் இயக்கம் , இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.பூசணி விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.பூசணி விதைகள் டிரிப்டோபன் பண்புகளை நிறைவாக கொண்டிருப்பதால் அவை தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கின்றன.

எல்லா வயதினரும் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக முனைப்புடன் செயல்படுவது முக்கியம். பூசணி விதைகளை சாப்பிடத் தொடங்குவதற்கு சுலபமான வழி தினமும் ஸ்நாக்சாகவோ அல்லது சிற்றுண்டி உணவுகளில் சேர்பதம் மூலமாகவோ சாப்பிடலாம். இருப்பினும், பூசணி விதைகளை உணவில் சேர்ப்பதற்கு முன்பு ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது நல்லது.

 
Published by:Sivaranjani E
First published: