விநாயகர் சதுர்த்திக்கு எள் உருண்டை செய்ய ரெசிபி...

எள் உஷ்ணத்தன்மை கொண்டது என்பதால் எள்ளுடன் வேர்க்கடலை சிறிது சேர்க்கலாம். மிகச்சத்தான உருண்டை இது.

எள் உஷ்ணத்தன்மை கொண்டது என்பதால் எள்ளுடன் வேர்க்கடலை சிறிது சேர்க்கலாம். மிகச்சத்தான உருண்டை இது.

  • Share this:
பண்டிகை என்றாலே இனிமையான தருணங்களோடு இனிப்பும் இணைவது தான். விநாயகர் சதுர்த்தியன்று வீட்டில் செய்யகூடிய ரெசிபிகளில் மிக முக்கியமானது எள் உருண்டைதான் அதனை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க.... 

தேவையான பொருட்கள்:

வெள்ளை எள் - 4 கப் அல்லது கருப்பு எள் பயன்படுத்தலாம்.

சர்க்கரை - 3 கப்

ஏலக்காய் - 6

நெய் - சிறிதளவுசெய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்த எள்ளு, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இதனை சிறிது மொற மொறப்பாக அரைக்கவும்.

அடுத்து ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு இடைவிடாது வறுத்து பாகு காய்ச்ச வேண்டும். பின்பு சர்க்கரையை பாகில் வறுத்த எள்ளை சிறிது சிறிதாக தூவி அத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள்.நெய் அல்லது நல்லெண்ணெய் தொட்டு உருண்டையாக பிடிக்க வேண்டும். தேவையெனில் மிகக்குறைந்த அளவு வெல்லம் சேர்த்து பாகாக்கி விட்டு பிடிக்கலாம்.

மேலும் படிக்க... குழந்தைகளுக்கு பிடித்த பால் கொழுக்கட்டை... இதோ ரெசிபி...

மேலும் படிக்க... விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... பிள்ளையாருக்குப் பிடித்த பூரணம் கொழுக்கட்டை ரெசிபி..

குறிப்பு: சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்தும் செய்யலாம். பாகு செய்யும் முன் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து பாகு செய்யலாம். இதனால் வெல்லத்தில் இருக்கும் கல் நீக்கப்படுகிறது. மேலும் எள்ளுவை பொடிக்காமலும் சேர்த்து உருண்டை செய்யலாம்.

மேலும் படிக்க... சர்க்கரை நோயாளிகளும் இந்த கொழுக்கட்டையை சாப்பிடலாம்...

விநாயகர் சதுர்த்திக்கு கதம்ப சுண்டல் செய்யலாம் வாங்க...

விநாயகருக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?   

விநாயகர் சதுர்த்திக்கு இந்த டயட் கொழுக்கட்டையை செஞ்சுபாருங்க..         

ஓட்ஸ் கொழுக்கட்டை ரெசிபி...
Published by:Vaijayanthi S
First published: