• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்...

காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்...

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் சேனைக்கிழங்கை வறுவல். இப்போது சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • Share this:
சேனைக்கிழங்கு வறுவல் சுலபமாக செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...


தேவையான பொருட்கள்:


சேனைக்கிழங்கு - 2 கப்




மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்


தனியா தூள் - 1/2 டீஸ்பூன்


கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்


கடுகு - 1/2 டீஸ்பூன்


வரமிளகாய் - 2


சோம்பு - 1/2 டீஸ்பூன்


பூண்டு - 4


கறிவேப்பிலை - தேவையான அளவு


எண்ணெய் - தேவையான அளவு


உப்பு - தேவையான அளவு




சேனைக்கிழங்கு



செய்முறை:




சேனைக்கிழங்கை சிறு துண்டுகளாக்கிக் தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். அடுத்து வரமிளகாய், பூண்டு, சோம்பு போன்றவற்றினை பேஸ்ட்டாக அரைக்கவும். அதன் பின்னர் சேனைக்கிழங்கினை தோல் உரித்து, மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து ஊறவிடவும்.

மேலும் படிக்க... தக்காளி மசாலா பூரி ரெசிபி...

ஸ்பைசி மட்டன் தொக்கு ரெசிபி...

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் ஊற வைத்துள்ள சேனைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும். இப்போது சூப்பரான காரசாரமான  சேனைக்கிழங்கு வறுவல் ரெடி...

மேலும் படிக்க... காளான் குடைமிளகாய் பொரியல் செய்வது எப்படி?

ஆம்பூர் சிக்கன் பிரியாணி வீட்டிலேயே செய்வது எப்படி?



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: