ஒரு செம்பருத்தி பூவில், மருத்துவ குணங்கள் பல நிறைந்திருக்கின்றன. அதன் இலை, மொட்டு, வேர் போன்ற அனைத்துமே மருந்தாகப் பயன்படுகிறது..
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பூ - 10
தண்ணீர் - 3 கப்
எலுமிச்சம் பழம் - 1
தேன் - தேவையான அளவு.
செய்முறை
முதலில் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து செம்பருத்திப் பூக்களைப் போட்டு மூடி, அடுப்பை அணைத்து விட வேண்டும். பின் செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின், வடிகட்டி எலுமிச்சம் பழ சாறு கலக்க வேண்டும்.
வண்ணமயமான ஆரஞ்சு நிறத்தில் கலவை மாறும். அத்துடன் தேவையான தேன் கலக்க வேண்டும். இப்போது சுவைமிக்க செம்பருத்தி பூ ஜூஸ் தயார். குளிர்பதனப் பெட்டியில் வைத்தும் பரிமாறலாம். அழகு நிறைந்திருக்கும் இந்த செம்பருத்தி பூவில், மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அதன் இலை, மொட்டு, வேர் போன்ற அனைத்துமே மருந்தாகப் பயன்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.