• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வீட்டிலேயே சுவையாக கெட்டித் தயிர் தயாரிப்பது எப்படி?

வீட்டிலேயே சுவையாக கெட்டித் தயிர் தயாரிப்பது எப்படி?

சுவையான கெட்டி தயிர்

சுவையான கெட்டி தயிர்

சுவையான கெட்டித் தயிர் தயாரிப்பதற்கு பால் எப்படி காய்ச்சவேண்டும் என்ற டெக்னிக் இதோ உங்களுக்காக…

  • Share this:
    இது மழை காலம் என்றாலும் தினமும் உணவில் தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது. கடைகளில் வாங்குகிற தயிர் எப்படி தயாரிக்கிறார்களோ என்று பலரும் ஐயம் கொள்வதால் வீட்டிலேயே தயிர் போட முயற்சித்து சரியாக வராமல் தோல்வி அடைகின்றனர்.
    நீங்கள் வீட்டிலேயே சுவையாக கெட்டித் தயிர் தயாரிக்க வேண்டுமா? அதற்கு பால் எப்படி காய்ச்ச வேண்டும் என்ற பக்குவம் தெரிந்திருக்க வேண்டும். வாங்க எப்படி பால் காய்ச்சுவது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

    தேவையான பொருட்கள்

    பால் - 1/2 லிட்டர்

    தயிர் - 1 டீஸ்பூன்

    சீனி - 1 டீஸ்பூன்



    செய்முறை

    1 லிட்டர் பாலை சிறிதுகூட தண்ணீர் ஊற்றாமல் நன்கு சுண்டக் சுண்டக் காய்ச்ச வேண்டும். பின்னர், பால் காய்ந்ததும் வெப்பம் சூடு முற்றிலும் குறையும் வரை ஆற விடுங்கள்.
    பிறகு, முழுவதும் சூடு குறைந்ததும் நுரை வருமாறு 4 -5 முறை பாலை ஆற்றுங்கள். அதன் பிறகு, அந்த பாலில் ஒரு ஸ்பூன் தயிரைக் கலந்துவிடுங்கள். ஸ்பூனால் நன்கு கலக்குங்கள். இதையடுத்து, அதில் சிறிதளவு சர்க்கரையை கலந்துவிடுங்கள்.

    இப்போது பாலை சில்வர் அல்லது மண் சட்டியிலோ மாற்றி தட்டு போட்டு மூடிவிடுங்கள். சரியாக 8 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான கெட்டியான தயிர் தயாராக இருக்கும்.

    குறிப்பு: தயிர் உறை ஊற்றும் வேலையை இரவில் செய்வது நல்லது.

    மேலும் படிக்க... இடியாப்ப பிரியாணி செய்ய ரெசிபி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: