ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

டீ , காஃபிக்கு பதில் இப்படி செய்து குடியுங்கள்... ஆரோக்கியத்திற்கும் நல்லது...

டீ , காஃபிக்கு பதில் இப்படி செய்து குடியுங்கள்... ஆரோக்கியத்திற்கும் நல்லது...

சத்துமாவு கஞ்சி

சத்துமாவு கஞ்சி

பால் விரும்பாதவர்களுக்கும், டீ , காஃபி பழக்கத்தை கைவிட நினைப்பவர்களுக்கும் இது நல்ல பானமாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இப்போது சிலர் பாலை தவிர்க்கிறார்கள். சிலர் பால் தவிர்க்க நினைத்தும் பழக்கத்தை கைவிட முடியாமல் டீ, காஃபி குடித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஒரே தீர்வாக இந்த பானம் அமையும். அதோடு இது உடலுக்கு ஆரோக்கிமும் , ஊட்டச்சத்தும் கொடுப்பதால் தாராளமாக பருகலாம். சரி இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வேர்க்கடலை - 1 கப்

பொட்டுக்கடலை - 1 கப்

கம்பு - 1 கப்

கேழ்வரகு - 1 கப்

கோதுமை - 1 கப்

ஜவ்வரிசி - 1 கப்

ஏலக்காய் - 4

சுக்குப்பொடி - 1 tsp

செய்முறை :

இப்போது ஒரு கடாய் வைத்து நன்கு சூடேறியதும் வேர்க்கடலையை முதலில் போட்டு வறுத்து தட்டில் போடுங்கள்.

பின் கம்பு, கோதுமை என அனைத்தையும் வாசம் வரும் வரை மிதமான தீயில் வறுத்து போடுங்கள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுக்க வேண்டும்.

ஏலக்காய், சுக்குப்பொடி மட்டும் போடக்கூடாது.

அனைத்தையும் வறுத்து எடுத்தபின் சூடு போக ஆற வையுங்கள்.

ஆறியதும் அவற்றை ஜாரில் கொட்டி அதனுடன் ஏலக்காய், சுக்கு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

எப்போதும் போல் இல்லாமல் இன்று வித்தியாசமாக பிரண்டை சட்னி செய்து அசத்துங்கள்...ரெசிபி இதோ...

நன்கு அரைத்துக்கொண்டதும். அதை சல்லடையில் சலித்துக்கொள்ளுங்கள்.

பின் சலித்த மாவை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்துக்கொள்ளுங்கள்.

இதை தினமும் சுடுதண்ணீரில் காய்ச்சி இனிப்புக்கு வெல்லம் சேர்த்து பருகலாம். இதில் தண்ணீருக்கு பதில் பாலும் கலந்துகொள்ளலாம். உங்கள் விருப்பம்தான்...

First published:

Tags: Food recipes, Protein