• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அவசரத்திற்கு வெங்காயம் -தக்காளி இல்லாத சாம்பார்... டேஸ்டுல எந்த குறையும் இருக்காது!

அவசரத்திற்கு வெங்காயம் -தக்காளி இல்லாத சாம்பார்... டேஸ்டுல எந்த குறையும் இருக்காது!

வெங்காயம் தக்காளி இல்லாத சாம்பார்

வெங்காயம் தக்காளி இல்லாத சாம்பார்

நீங்கள் எப்போதுமே சாப்பிடும் சாம்பார் ருசியில் தான் இருக்கும்.

  • Share this:
    வெங்காயம் தக்காளி இல்லாத சுவையான சாம்பார் செய்யது எப்படி? என தெரிந்துகொள்ளுங்கள். இந்த லாக்டவுன் காலத்தில் உங்களுக்கு பெரிதும் கைக்கொடுக்கும்.

    நம்ம ஊரு சவுத் இந்தியன் சமையலில் வெங்காயம் - தக்காளிக்கு கட்டாயம் இடம் உண்டு. காரணம், தக்காளி வெங்காயம் இல்லாத பெரும்பாலும் எந்த உணவுகளையும் நாம் விரும்பி சாப்பிடுவதில்லை. இதுப்போன்ற லாக்வுடன் காலத்தில் அவசர சமையலை கண்டிபாக தெரிந்து கொண்டால் அவை கட்டாயம் கைக்கொடுக்கும். ஆஃபிஸூக்கு அவசரமாக கிளம்பும் நேரத்திலும், ஃபிரிட்ஜில் தக்காளி வெங்காயம் ஸ்டாக் இல்லாத நேரத்திலும் இந்த மெத்தேடைஃபாலோ செய்யுங்கள். டேஸ்டில் குறை வருமா என யோசித்தால் அதுவும் கிடையாது. நீங்கள் எப்போதுமே சாப்பிடும் சாம்பார் ருசியில் தான் இருக்கும்.

    also read சினிமாவை மிஞ்சும் கிரைம் தொடர் ’நாம் இருவர் நமக்கு இருவர் ’

    பேச்சிலரும் இந்த சமையலை எளிதில் செய்துவிடலாம். ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்திடலாம்.

    தேவையான பொருட்கள்:

    மிளகு, சீரகம், துவரம் பருப்பு, பூண்டு, மல்லிபொடி சாம்பார் பொடி மஞ்சள் பொடி, புளி, உப்பு, நல்லெண்ணெய்

    எளிமையான செய்முறை:

    முதலில் அடுப்பில் கடாயை வைத்து அது லேசாக சூடானதும் மிளகு, சீரகம், துவரம் பருப்பு இவற்றை வருத்தெடுத்து கொள்ள வேண்டும். சூடு ஆறியதும் அதை மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வர மிளகாய், உளுந்து, வெந்தயம் போட்டு தாளிக்க வேண்டும். வதங்கியதும் அதில் அதில் பூண்டு, கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.

    பின்பு அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, மல்லிபொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை எண்ணெய்யில் வதக்கவும். அதன் பின்பு புளில்கரைசலை வடிக்கட்டி அதில் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்த்து மேலே கொஞ்சம் சாம்பார் பொடியையும் தனியாக வேகவைத்த பருப்பையும் சேர்க்கவும்

    10 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் அருமையான சாம்பார் தயார். இதை இட்லி, தோசை, வெறும் சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தம் போல் இருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: