• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடியை வீட்டிலயே செய்யலாம் வாங்க!

தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடியை வீட்டிலயே செய்யலாம் வாங்க!

சாம்பார் பொடி

சாம்பார் பொடி

தஞ்சாவூர் ஸ்டைலில் சாம்பார் பொடியை செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம் வாங்க...

  • Share this:
நாம் சாம்பார் வைக்கும்போது ஒவ்வொரு மசாலாப் பொடியையும் தனித்தனியாக சேர்த்து சாம்பார் வைப்போம். ஆனால் இவ்வாறு செய்யும் போது மசாலா பொடிகளின் அளவை சரியான அளவில் சேர்க்காவிட்டால் சாம்பார் சுவையாக வராது. இதற்கு தீர்வாக ஒரே மசாலாவாக, ஒரு சாம்பார் பொடியை தயார் செய்து வைத்து வைத்துவிட்டால், சாம்பார் வைக்கும் போது எளிதாக இந்த மசாலாவை சேர்த்து சுவையான சாம்பார் வைக்கலாம். அத்தகைய சாம்பார் பொடியை செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருள்கள் 

மிளகாய் வத்தல் - 1/4 கிலோ

கொத்தமல்லி - 300 கிராம்

சீரகம் - 100 கிராம்

துவரம் பருப்பு - 50கிராம்

கடலைப் பருப்பு - 50 கிராம்

மிளகு - 25 கிராம்

வெந்தயம் - 25 கிராம்

செய்முறை 

முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித் தனியாக ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். கருக விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும். வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மெசினில் கொடுத்து அரைக்கவும். இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.
காற்று புகாத பாட்டிலில் போட்டு 5 மாசம் வரை உபயோகிக்கலாம்.

மேலும் படிக்க... சுவையான அவியல் செய்ய ரெசிபி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: