தன்னுடைய அழகை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக நடிகை சமீதா, கீரைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான ஸ்மூதியைத் தினமும் காலையில் குடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா எனப்படும் சமந்தா ரூத் பிரபு, தன்னுடைய உடலுக்கும், அழகுக்கும் அதிக முக்கியத்தும் கொடுத்து வருகிறார். என்ன தான் பிசியான சூட்டிங் செட்டுல்களில் இருந்தாலும் தன்னுடைய ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவேன் என்று அடிக்கடி சோசியல் மீடியாவில் சமந்தா கூறியிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
இதோடு உடலை பிட்னஸாக வைத்துக்கொள்வதற்கு தினமும் கடுமையான உடற்பயிற்சியும் மறக்காமல் யோகவும் மேற்கொள்வாராம் சமந்தா. இதனால் தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறப்புத்தோற்றத்தில் தோன்றியது முதல், ஈ, பாணா காத்தாடி, நடுநிசி நாய்கள், பிருந்தாவனம், நீ தானே எந்தன் பொன்வசந்தம்,தெறி, 24 என இதுவரை நடித்த அனைத்துப்படங்களிலும் உடல் அமைப்பை அப்படியே கட்டுக்குள் வைத்திருக்கும் நடிகைகளில் ஒன்றாகவும் இருக்கிறார் சமந்தா.
இவ்வாறு தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு உடற்பயிற்சிகளைத் தவி பிற ஆரோக்கியமான பானங்களையும் எடுத்துக்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், அதில் முக்கியமான ஒன்றான ஸ்மூதி குறித்தும் (Green smoothie) அதனை எப்படி செய்வது? என்பது குறித்து இங்கே நாமும் தெரிந்துக்கொள்வோம்.
கிரீன் ஸ்மூதி செய்யும் முறை(Green smoothie):
தேவையானப் பொருள்கள்:
இலைக்கோசு- 1 கைப்பிடி
பசலைக்கீரை - 1கைப்பிடி
ஆளி விதைகள் - 2 தேக்கரண்டடி
சூரிய காந்தி விதைகள் - 1 தேக்கரண்டி
பாதாம்- 1 டீஸ்பூன்
சியா விதைகள் - 1 டீஸ்பூன்
இளநீர், மற்றும் டிரை வாழைப்பழம்
செய்முறை:
முதலில் இலைக்கோசு மற்றும் பசலைக்கீரையை தண்ணீரில் நன்றாக கழுவி சில நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்ற வேண்டும். இதனுடன் ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள், சியா விதைகள் மற்றும் உடைத்த பாதாம் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கிவிட்டு சுமார் 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
தொடர்து வேக வைத்த கீரைகள் மற்றும் இளநீருடன் கலந்த விதைகள் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றைச் சேர்ந்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்மூதி ரெடியாகிவிட்டது. இறுதியில் இதனைப் பரிமாறுவதற்கு முன்னதாக, ஐஸ் கட்டி தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க ஜூம்பா பயிற்சி டிரை பண்ண போறீங்களா..? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுக்கோங்க...
இது போன்று கீரை வகைகளை கொண்டு செய்யப்படும் ஆரோக்கியமான ஸ்மூத்தியைத்தான் தான் தினமும் காலையில் பருகுவதாகத் தெரிவிக்கும் சமந்தா, இதில் சேர்க்கும் ஒவ்வொரு பொருள்களிலும் ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளதாகக் கூறுகிறார். மேலும் “ தான் ஸ்மூதி செய்து அருந்துவதற்கு முன்னதாக, ஒரு டீஸ்பூன் புரோட்டீன் பவுடர் அல்லது கொலாஜன் பவுடரையும்“ சேர்ப்பேன் எனத் தெரிவிக்கும் அவர், தேவைப்பட்டால் நீங்களும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்.
இது குறித்து சோசியல் மீடியாவிலும் சமந்தா, இந்த ஆரோக்கியமான உணவு முறை குறித்து பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்களின் அழகிற்கு இது தான் காரணமாக? நாங்களும் இனி கொஞ்சம் டிரை பண்ணி பார்க்கிறோம்.. என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.