ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நீங்கள் பயன்படுத்தும் உப்பின் அளவு சரியா..? எந்த உணவுக்கு எவ்வளவு சேர்க்க வேண்டும்..?

நீங்கள் பயன்படுத்தும் உப்பின் அளவு சரியா..? எந்த உணவுக்கு எவ்வளவு சேர்க்க வேண்டும்..?

உப்பு

உப்பு

உணவுக்கு சுவை சேர்ப்பது உப்பு தான். ஒரு சில சுவைகளை பேலன்ஸ் செய்ய வேறு சுவை சேர்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உப்பில்லா பண்டம் குப்பையிலே! உப்பு சேர்க்காமல் உணவின் அசல் சுவையே தெரியாது. அதே போல, அதிக உப்பு சேர்த்தாலும் சாப்பிட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் உப்பு சேர்க்க வேண்டும். இது தான் சரியான அளவு என்பதை எதை வைத்தும் அளவிட முடியாது. ரெசிபிக்கள், இணையத்தில் காணப்படும் வீடியோக்களில் கூட, உப்பு தேவையான அளவு என்று தான் கூறப்படும். எந்த அளவு உணவு சேர்ப்பது சரியானது என்பதை இங்கே பார்க்கலாம்.

உணவில் உப்பு என்ன காரணங்களுக்காக சேர்க்கப்படுகிறது :

உணவுக்கு சுவை சேர்ப்பது உப்பு தான். ஒரு சில சுவைகளை பேலன்ஸ் செய்ய வேறு சுவை சேர்க்கப்படுகிறது. உதாரணமாக, புளிப்பு சுவைக்கு கொஞ்சம் இனிப்பு (வெல்லம்) சேர்ப்பது அதிக புளிப்பை குறைக்கும். அதே போல, இனிப்புக்கு கொஞ்சம் உப்பு சேர்ப்பது, அதீதமான தித்திப்பை குறைத்து இனிப்பு திகட்டாமல் இருக்கும். அதே போல, கிட்டத்தட்ட அனைத்து சுவைகளின் மிகப்பெரிய சுவையூட்டி உப்பு தான். அதே போல, எந்த ரசாயனமும் இல்லாமல், உணவை பாதுகாப்பாக வைப்பது உப்பு.

தினமும் செய்யும் சமையலில் உப்பு சேர்த்தால் தான் புளிப்பும் காரமும் பேலன்ஸ் ஆகி, சாப்பிடும் சுவை கிடைக்கும். உப்பே இல்லாமல் அல்லது குறைவான உப்பு சேர்த்தால், மற்ற பொருட்கள் எவ்வளவு சரியாக இருந்தாலும், உணவு சுவைக்காது. உணவின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மையை உப்பு குறைக்கிறது. பாகற்காயை உப்பில் ஊறவைத்தால், கசப்பு சுவை மட்டுப்படும்.

ஊறுகாய் செய்யும் போது, இயற்கையாக காய்களில் உள்ள சுவையை மெருகூட்டுவது, உணவின் தன்மையை மாற்றி, நீண்ட காலத்துக்கு கெடாமல் வைத்திருக்கும். உதாரணம், உப்பில் ஊறவைக்கப்படும் வடுமாங்காய் அல்லது மாங்காய். மாதக்கணக்கில் உப்பில் ஊறவைகப்பட்டு, தேவைப்படும் போது, காரம் சேர்த்து சாப்பிடும் வழக்கம் உள்ளது.

பாலில் மட்டுமல்ல... இந்த உணவுகளிலும் கால்சியம் சத்து அளவுக்கு அதிகமாக உள்ளது..!

அடுத்ததாக, வற்றல். மிளகாய் முதல் கத்திரி, வெண்டை வரை அதிகமாக விளையும் காலங்களில், காய்கறிகளை வாங்கி வற்றலாக செய்து வைக்கும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. வற்றல் செய்யும் போது, உப்பு சேர்ப்பது துவர்ப்பு மற்றும் கசப்பு சுவையை குறைக்கிறது, நீண்ட நாட்களுக்கு பயன்படும் வகையில் பாதுகாக்கிறது.

எந்த உணவுக்கு எவ்வளவு உப்பு தேவை?

* இவ்வளவு உப்பு தான் சேர்க்க வேண்டும் என்ற விதி இல்லை. எனவே, சரியான அளவு தெரியவில்லை என்னும் போது, கொஞ்சம் கொஞ்சமாக சமைக்கும் போதே சேர்க்கலாம்.

தூங்குவதற்கு முன் பாலில் ஒரு ஏலக்காய்.... இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் பலன் கிடைக்கும்..!

* சூப், குழம்பு, மசாலாக்கள் சமைக்கும் போது அதிகபட்சமாக 1 ½ டீஸ்பூன் சேர்க்கலாம்

* இதுவே, இறைச்சி, கடல் உணவுகள், சிக்கன் ஆகியவை சமைக்கும் போது, கொஞ்சம் குறைவாக சேர்க்க வேண்டும்.

* ஒரு சில உணவுகளில் ஏற்கனவே உப்பு இருக்கும். உதாரணம், சாஸ் வகைகள், வெண்ணெய், கெட்சப், ஊறுகாய், வற்றல், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சமையலில் சேர்க்கும் போது, உப்பை குறைத்து சேர்க்கலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Salt