ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சபரிமலை அரவணப் பாயாசம்... வீட்டிலேயே செய்ய ரெசிபி

சபரிமலை அரவணப் பாயாசம்... வீட்டிலேயே செய்ய ரெசிபி

அரவணப் பாயாசம்

அரவணப் பாயாசம்

Aravana Payasam | கேரளா கோயில்களில் வழங்கப்படும் பிரத்யேகப் பிரசாதம் இந்த அரவணப் பாயாசம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு போய் ஐயப்பனை தரிசித்து வருவார்கள். அங்கு வழங்கப்படும் பிரசாதமான அரவணப் பாயாசத்திற்கு தனி சிறப்புண்டு. இந்த அரவணப் பாயாசத்தை வீட்டில் ஈஸியாக எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் 

புழுங்கலரிசி - 200 கிராம்

வெல்லம் - 1 கிலோ

தண்ணீர் - தேவையான அளவு

நெய் - 250 மில்லி

ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்

Also see... பலாப்பழம் பாயாசம் செய்வது எப்படி?

செய்முறை

1. முதலில் புழுங்கலரிசியை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
3. வடிகட்டிய வெல்லத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும்.
4. இத்துடன் அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும். அதிகம் குழையாமலும், அதிகம் வெந்து போகாமலும் பார்த்துக் கொள்ளவும்.
5. பின்னர் அரிசி உடைய ஆரம்பிக்கும் போது நெய்யை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
6. பார்ப்பதற்கு வேகாதது போல இருக்கும் இந்தப் பாயசம் சாப்பிடும் போது கரகரவென்றிருக்கும். இப்போது சூப்பரான அரவணப் பாயாசம் ரெடி.
First published:

Tags: Sabarimalai, Sabarimalai Ayyappan temple, Sweet recipes