ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சில்லுனு மழைக்கு சூப்பரான ஸ்நாக்ஸ்.. சூடா சாப்பிட காளான் ரெசிபி.!

சில்லுனு மழைக்கு சூப்பரான ஸ்நாக்ஸ்.. சூடா சாப்பிட காளான் ரெசிபி.!

ரோட்டு கடை காளான்

ரோட்டு கடை காளான்

வீட்டில் அனைவருக்கும் பிடித்த இந்த காளானை நீங்களே சமைத்து கொடுத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரோட்டுக்கடை காளானை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனாலும் சிலருக்கு அது சுத்தமாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கலாம். அதேசமயம் வீட்டில் அனைவருக்கும் பிடித்த இந்த காளானை இந்த மழை சீசனுக்கேற்ப நீங்களே சமைத்து கொடுத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம். எனவே உங்களுக்கான ரெசிபி இதோ...

  தேவையான பொருட்கள் :

  முட்டைக்கோஸ் - 2 கப்

  காளான் - 2 கப்

  மைதா - 1 கப்

  சோள மாவு - 1/4 கப்

  மிளகாய் தூள் - 1 table spoon

  கரம் மசாலா - table spoon

  உப்பு - தே. அளவு

  எண்ணெய்- வறுக்க

  வதக்க :

  வெங்காயம் - 3

  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்

  பச்சை மிளகாய் - 2

  கறிவேப்பிலை - சிறிதளவு

  தக்காளி - 2

  மஞ்சள் - 1 tsp

  மிளகாய் தூள் - 2 tsp

  கரம் மசாலா - 1 tsp

  தனியா தூள் - 1 tsp

  உப்பு - சிறிதளவு

  சோளமாவு - 1 tsp

  செய்முறை :

  முதலில் காளான், கோஸ் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் அதில் மைதா, சோளமாவு, மிளகாய் தூள் என மிக்ஸிங் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸ் செய்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.

  பின் எண்ணெய் காய வைத்து அதில் இந்த மிக்ஸிங்கை பக்கோடா போல் வறுத்து எடுக்கவும். பின் கடாய் வைத்து அதில் வதக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.

  Also Read : ஏதாவது சாப்பிடனும் போல் உள்ளது என கேட்குக் குழந்தைகளுக்கு இந்த பிரெட் ரோல் செய்து கொடுங்கள்..

   தக்காளி அரைத்து போட வேண்டும். சோள மாவை ஒரு கப் தண்ணீரில் கலந்து ஊற்றவும். மசாலா நன்கு மிக்ஸானதும் வறுத்து வைத்துள்ள காளானை போட்டு பிரட்டவும். வறுத்த காளான் மிக்ஸிங்கை முழுதாக போடாமல் உடைத்து போடவும். அவ்வளவுதான் காளான் ரெடி.

  Published by:Josephine Aarthy
  First published:

  Tags: Evening Snacks, Mushroom recipes, Spicy Food