• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ரோஸ் சர்பத், ரோஸ் மில்க், ரோஸ் லஸி.... ரோஸ் சிரப் கொண்டு இத்தனை சம்மர் டிரிங்க்ஸ் செய்யலாமா..?

ரோஸ் சர்பத், ரோஸ் மில்க், ரோஸ் லஸி.... ரோஸ் சிரப் கொண்டு இத்தனை சம்மர் டிரிங்க்ஸ் செய்யலாமா..?

ரோஸ் சிரப்

ரோஸ் சிரப்

ரோஸ் சர்பத் அல்லது ரோஸ் சிரப் இயற்கை மூலிகைகள் கொண்டவை, இவை உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி மற்றும் ஆற்றலை வழங்க கூடியவை.

  • Share this:
நாட்டின் பல பகுதிகளில் கோடை வெப்பம் அதிகரிக்க துவங்கி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குளேயே முடங்கி இருந்தாலும் கோடை வெப்பம் அவர்களையும் வாட்டி எடுக்கும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. வாட்டி வதைக்கும் இந்த கோடையில் வெப்பத்தை எதிர்த்து போராட புத்துணர்ச்சியூட்டும் பானங்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், அந்த பட்டியலில் ரோஸ் சர்பத் தனித்து நிற்கிறது. சிறந்த கோடைகால குளிர்பானமாக பல்லாண்டுகளாக நிலைத்து நிற்கின்றது ரோஸ் சர்பத்.

ரோஸ் சர்பத் அல்லது ரோஸ் சிரப் இயற்கை மூலிகைகள் கொண்டவை, இவை உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி மற்றும் ஆற்றலை வழங்க கூடியவை. பல்வேறு வழிகளில் ரோஸ் சர்பத் அல்லது ரோஸ் சிரப் தயாரிக்கும் முறைகளை பற்றி காணலாம்.

1. ரோஸ் சிரப் மில்க் ஷேக் ( Rose Syrup Milk Shake ):

பொதுவாக எல்லா சீசனிலும் குறிப்பாக கோடையில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு பொதுவான பானம் மில்க் ஷேக்குகள். இதுவரை நீங்கள் மாம்பழம், வாழைப்பழம், கிவி மில்க் ஷேக்குகளை முயற்சித்திருக்கலாம். ஆனால் இந்த கோடையில் நீங்கள் இந்த ரோஸ் சிரப் மில்க் ஷேக்கை முயற்சித்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

* குளிர்ந்த பால் - 1 கிளாஸ்

* ரோஸ் சிரப் - 2 டீஸ்பூன்

* சர்க்கரை - சுவைக்கு ஏற்ப

* நறுக்கிய உலர் பழங்கள்



செய்முறை:

* மேற்சொன்னதில் உலர் பழங்களைத் தவிர அனைத்து பொருட்களையும் ஒரு பிளெண்டர் ஜாரில் எடுத்துக் கொள்ளுங்கள்

* இப்போது மற்ற பொருட்களை பிளெண்டர் ஜாரை பயன்படுத்தி நன்றாக கலக்கவும்

* இந்த கலவை நுரைக்கும் வரை அரைக்க வேண்டும்

* இப்போது இதை கண்ணாடி கிளாஸில் ஊற்றி அதனுள் 2 -3 ஐஸ் க்யூப்ஸ்களை போடுங்கள்

* எடுத்து வைத்திருக்கும் உலர் பழங்களை மேலே தூவி இப்போது பருகுங்கள்

2. ரோஸ் சிரப் லெமனேட் (Rose Syrup Lemonade):

சப்ஜா விதைகளுடன் கூடிய ரோஸ் சிரப் லெமனேட் பானம் உடலை குளிரூட்டும் பண்புகளை கொண்டது. மேலும் இது உங்கள் உடலை நீண்ட நேரம் நீரேற்றமாக வைத்திருக்கும்.

தேவையான பொருட்கள்:

* குளிர்ந்த நீர் - 1 கிளாஸ்

*ரோஸ் சிரப் -1-2 டீஸ்பூன்

*1 முழு எலுமிச்சையின் சாறு

* சுவைக்கேற்ப சர்க்கரை மற்றும் கல்லுப்பு

* கருப்பு மிளகு தூள் - ஒரு பிஞ்ச்

* 30 நிமிடங்களுக்கு முன் ஊற வைக்கப்பட்ட சப்ஜா விதைகள்

* நீங்கள் விரும்பினால் 2-3 புதினா இலைகள்



செய்முறை:

* ஒரு பெரிய கிண்ணம் அல்லது ஒரு கிளாஸில் மேற்காணும் அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு நன்கு கலக்கவும்

* சர்க்கரை மற்றும் உப்பு கரையும் வரை அதை நன்கு கலக்கவும்

* இப்போது இதனுடன் புதினா இலைகளை சேர்த்து குளிர்ச்சியாக பருகவும்

3. ரோஸ் சிரப் லஸ்ஸி ( Rose Syrup Lassi ):

உலர் பழங்களுடன் கூடிய சுவையான ரோஸ் சிரப் லஸ்ஸி அனைவரும் விரும்பும் ஒரு கோடைகால பானமாக உள்ளது.

தேவையான பொருட்கள்:

* தயிர் அல்லது லேசாக புளித்த தயிர் -2 கப்

*குளிர்ந்த நீர் - 1 கிளாஸ்

*ரோஸ் சிரப் - 2-3 டீஸ்பூன்

* சர்க்கரை (சுவைக்கு ஏற்ப)

* பாதாம், முந்திரி, திராட்சை போன்ற நறுக்கிய உலர் பழங்கள்



செய்முறை:

* உலர் பழங்களைத் தவிர அனைத்து பொருட்களையும் ஒரு பிளெண்டர் ஜாடியில் எடுத்து கொள்ளுங்கள்

* இப்போது அவற்றை நன்றாக கலக்கவும்

* கலவை மிகவும் திக்காக இருந்தால் தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொள்ளுங்கள்

* பின் இந்த கலவையை கண்ணாடி கிளாஸிற்கு மாற்றி மேலே உலர் பழங்களை தூவி சாப்பிடலாம்

சுவையான சப்பாத்தி சாண்ட்விச் : இப்படி குழந்தைகளுக்குப் பிடித்த புதுவித ரெசிபிக்களை ட்ரை பண்ணுங்க..

4. ரோஸ் சிரப் ஃபலுடா ( Rose syrup Falooda ):

தேவையான பொருட்கள்:

* குளிர்ந்த பால் - 1 கிளாஸ்

* ஃபலுடா விதைகள் - 1-2 டீஸ்பூன்

* சர்க்கரை - சுவைக்கு ஏற்ப

* 30 நிமிடங்களுக்கு முன் ஊற வைக்கப்பட்ட1 டீஸ்பூன் சப்ஜா அல்லது துளசி விதைகள்

* ரோஸ் சிரப் - 1-2 டீஸ்பூன்

* வெண்ணிலா ஐஸ்கிரீம் - 2 டீஸ்பூன்

* நறுக்கிய உலர் பழங்கள்



செய்முறை:

* முதலில் பாக்கெட்டில் உள்ள அறிவுறுத்தல்களின் படி ஃபலூடா விதைகளை வேக வைத்து தயார் செய்யவும்

* வேக வைக்கப்பட்ட விதைகளை தனியே எடுத்து வைத்து குளிர விடவும்

* ஒரு கிளாஸை எடுத்து அதில் ரோஸ் சிரப்பை சேர்த்து கொள்ள வேண்டும்

* பின் அந்த கிளாஸில் பால் ஊற்றி ஆற வைத்த சப்ஜா விதைகளை சேர்க்கவும்

* சர்க்கரை மற்றும் ஃபலூடா விதைகளை சேர்த்து நன்கு கிளறவும்

* இப்போது அதில் வெண்ணிலா ஐஸ்கிரீமை சேர்த்து உலர் பழங்களால் அலங்கரிக்கவும்

* இதன் மேலே சிறிது ரோஸ் சிரப்பை தூவ கூட செய்யலாம்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: