மெர்சல் படத்தில் சமந்தா விஜயைப் பார்த்து தம்பி ரோஸ் மில்க் குடிக்கலாமா என்று கேட்கும் டைலாக் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அந்தப் படத்திற்குப் பிறகு ரோஸ் மில்க் என்றாலே சமந்தாவும், மெர்சல் படமும்தான் நினைவுக்கு வரும். அதேபோல் சிறியவர்கள், பெரியவர்கள் என ரோஸ்மில்கிற்கு ரசிகர் கூட்டம் அதிகம். கடையில் ஒரு டம்ளர் குடித்து திருப்தி அடைவதைவிட வீட்டிலேயே செய்து ஆசை தீர அடிக்கடி குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 1 & 1/2 கப்
பிங்க் ஃபுட் கலர் - 3/4 tsp
ரோஸ் எசன்ஸ் - 3/4 tsp to 1 tsp
பால் - ரோஸ் மில்க் தயாரிக்கத் தேவையான அளவு
செய்முறை :
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரைக் கலந்து நன்குக் கொதிக்கவிடவும். குறைந்தது 4 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.
இறக்குவதற்கு முன்பு பிங்க் ஃபுட் கலரைச் சேர்க்கவும். நன்கு அடர்த்தியான திரவமாக மாறும்போது அடுப்பை அணைத்துவிடவும்.
இறுதியாகத் தீயை அணைத்தபின் ரோஸ் எசன்ஸை சேர்த்து நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் ரோஸ் மில்க் எசன்ஸ் தயார்.
அதை இறுக்கமான டப்பாவில் அடைத்து ஃபிரிஜ்ஜில் வைத்துவிடுங்கள்.
தேவையான அளவு கொதித்த பாலை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியானதும் வெளியே எடுத்து அதில் 3 மேசைக்கரண்டி ரோஸ் மில்க் எசன்ஸ் சேர்த்துக் கலக்கினால் ரோஸ் மில்க் ரெடி..!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.