Home /News /lifestyle /

ரோட்டுக்கடை தக்காளி சட்னி மிகவும் பிடிக்குமா..? அதே பக்குவத்தில் வீட்டில் செய்ய ரெசிபி..!

ரோட்டுக்கடை தக்காளி சட்னி மிகவும் பிடிக்குமா..? அதே பக்குவத்தில் வீட்டில் செய்ய ரெசிபி..!

தக்காளி சட்னி

தக்காளி சட்னி

அதன் சுவை வீட்டில் கூட கிடைப்பதில்லை என்பார்கள். இதனாலேயே அதிகமாக வெளியில் சாப்பிடுவார்கள். இனியும் ஏன் அந்த சிரமம். வீட்டிலேயே அதே பக்குவத்தில் சூப்பராக செய்யலாம்.

சிலர் தள்ளுவண்டிக்கடை , ரோட்டுக்கடைகளில் விற்கக்கூடிய இட்லி , தோசையை சாப்பிடும்போது அங்கு வைக்கக் கூடிய தக்காளி சட்னிக்காகவே சாப்பிடுவார்கள். அதன் சுவை வீட்டில் கூட கிடைப்பதில்லை என்பார்கள். இதனாலேயே அதிகமாக வெளியில் சாப்பிடுவார்கள். இனியும் ஏன் அந்த சிரமம். வீட்டிலேயே அதே பக்குவத்தில் சூப்பராக செய்யலாம். ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள் :

தக்காளி - 3
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 3

தாளிக்க :

கடுகு - 1/2 tsp
உளுந்தம் பருப்பு - 1/2 tsp
எண்ணெய் - 2 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை :

தக்காளி , பூண்டு மற்றும் காய்ந்த மிளகாயை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

பலாக்கொட்டை மற்றும் பசலைக்கீரையை வைத்து சாம்பார் : அற்புதமான சுவையில் ரெசிபி..!

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து பொறித்துக்கொள்ளுங்கள்.

பின் கறிவேப்பிலை சேர்த்து பொறிந்ததும் அரைத்த விழுதை அதில் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

பின் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் ரோட்டுக்கடை தக்காளி சட்னி தயார்..!

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Chutney, Tomato

அடுத்த செய்தி