Home /News /lifestyle /

உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள்!

உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள்!

உப்பு ஸ்கிரப் : உப்பும் ஆலிவ் எண்ணெயும் கலந்து கால்களில் தேய்த்து மசாஜ் செய்யவும். மசாஜ் செய்ய பியூமிஸ் கல் இருந்தால் பயன்படுத்தலாம். ஸ்கிரப் செய்யும்போது வெடிப்புகளுக்குள் கீரல் விழாமல் பார்த்துக்கொள்ளவும்.

உப்பு ஸ்கிரப் : உப்பும் ஆலிவ் எண்ணெயும் கலந்து கால்களில் தேய்த்து மசாஜ் செய்யவும். மசாஜ் செய்ய பியூமிஸ் கல் இருந்தால் பயன்படுத்தலாம். ஸ்கிரப் செய்யும்போது வெடிப்புகளுக்குள் கீரல் விழாமல் பார்த்துக்கொள்ளவும்.

உணவில் ஒரு சிட்டிகை உப்பு கூடினாலோ குறைந்தாலோ அந்த உணவு எத்தனை சுவை மிகுந்ததாக இருந்தாலும் உண்ண முடியாது.

  • News18
  • Last Updated :
    உப்பில்லா உணவு குப்பையிலே என்கிற பழமொழிக்கு ஏற்ப உணவில் ஒரு சிட்டிகை உப்பு கூடினாலோ குறைந்தாலோ அந்த உணவு எத்தனை சுவை மிகுந்ததாக இருந்தாலும் உண்ண முடியாது. அதுதான் உணவின் முதல் சுவைக்கு அந்தாதி. அதற்காக அதை அளவுக்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

    உப்பின் தேவை

    ஒருவருக்கு உப்பின் தேவை என்பது அவரின் உடல் வெளியிடும் சோடியத்தின் அளவைப் பொருத்து அமைகிறது. உதாரணமாக அதிக உடற்பயிற்சி, உடல் உழைப்பை செய்கிறவர்களுக்கு வியர்வையின் மூலமாக சோடியம் அதிகமாக வெளியேறும். அவர்களுக்கு அதிகமான சோடியத் தேவை இருக்கும். சராசரியாக ஆரோக்கியமான உடலைக் கொண்டோருக்கு ஒரு நாளைக்கு 1500 முதல் 2300 மில்லி கிராம் அளவு சோடியம் போதுமானது. இது கிட்டதட்ட ஒரு மேசைக்கரண்டி உப்பாகும். ஆனால் இந்தியர்கள் 10 முதல் 12 கிராம் சோடியம் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்கின்றனர். இது உண்ணும் போது சமைக்கும்போது என இரு முறை அவர்களின் தேவைக்கு ஏற்ப கூட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு எடுத்துக் கொள்வதால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

    உயர் இரத்த அழுத்தம் : நீங்கள் அதிகமாக உப்பை உட்கொண்டால் தண்ணீர் தாகம் அதிகரிக்கும். அதனால் நீங்கள் அதிக தண்ணீர் அருந்தும்போது உடல் தேவைக்கு அதிகமான உப்பு சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஒருவேளை நீங்கள் தண்ணீர் அருந்தாமல் விட்டால்; அந்த உப்பானது இயற்கையாக செல்களுக்குள் உற்பத்தியாகக் கூடிய நீருடன் இணைந்துவிடும். இது இரத்தத்திலும் ஊடுருவி கலந்துவிடும். இதனால்தான் உயர் இரத்த அழுத்தப் பிரச்னைகள், அதிகப்படியான கோபம் ஆகியவை வருகின்றன. ஆகவே, நீங்கள் உணவு உண்ட பின் அதிக நீரை அருந்தி தேவையில்லாத உப்பை வெளியேற்றுங்கள்.அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள், நீரை அதிகம் அருந்தவதின் மூலம் வரும் சிறுநீர் வழியாகவே அதிகப்படியான சோடியத்தை வெளியேற்ற முடியும்.

    சிறுநீர்பை பிரச்னைகள் : அதிக அளவிலான சோடியம் சிறுநீர் பையையும் தாக்குகிறது. இதனால் சிறுநீர் கல் உருவாதல், சிறுநீர் பழுதடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால் அதிக நீரை அருந்தி சிறுநீரை அவ்வபோது வெளியேற்றிவிடுங்கள். சிறுநீர் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்தாமல் உடனே வெளியேற்றிவிடுங்கள். அந்த சோடியம் கலந்த சிறுநீர் அதிகம் நேரம் தேங்கி இருந்தால் சிறுநீர் பையை பாதிக்கும்.

    தசை வலிகள் : அதிக உப்பு நரம்பு மண்டலத்தையும் தசைகளின் ஆற்றலையும் தடுக்கிறது. இது உடலின் மின்னழுத்த ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. இதனால் தசைப் பிடிப்பு, தசை வலிகள் போன்றவை ஏற்படுகின்றன.

    எலும்புப் பிரச்னை : உடலுக்குத் தேவையான கால்சியம் சத்துகள் எலும்பில்தான் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சோடியமானது எலும்பில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்சி விடுகிறது. பின் அது சிறுநீர் வழியாக சோடியம் வெளியேறும்போது கால்சியமும் வெளியேறிவிடுகிறது. இதனால் எலும்பு அரித்து எலும்புப்புரைகள் உருவாகின்றன. இதனால்தான் எலும்புகள் வலுவிழந்து மூட்டு வலி, முதுகு வலி , எலும்பு முறிவு, எலும்பு உறுதியின்மை போன்ற பிரச்னைகள் வருகின்றன.
    எனவே அளவான உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.

    Also see:

    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி