முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நீண்ட காலத்திற்கு மாவு கெடாமல் இருக்க என்ன செய்வது.. இதை ட்ரை பண்ணுங்க..!

நீண்ட காலத்திற்கு மாவு கெடாமல் இருக்க என்ன செய்வது.. இதை ட்ரை பண்ணுங்க..!

மாவு

மாவு

சமைப்பதற்கு மாவு எடுக்கும் போது ஈரமான கைகளால் தொடாதவாறு பார்த்துக்கொள்ளவும். அதேபோல ஈரமான கொள்கலனில் சேமித்து வைத்தாலும் கெட்டுப்போக வாய்ப்பு அதிகம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பல வகையான உணவுகளை சமைக்க மாவு அழியாத மூலப்பொருள் என்று நம்பப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. பொதுவாக நம் வீடுகளில் இன்ஸ்டண்ட் இட்லி, புட்டு, சப்பாத்தி, போன்ற உணவுகளை சமைக்க அரிசி மாவு, கோதுமை போன்றவற்றை மளிகை பொருட்களுடன் சேர்த்து வாங்கி வைப்போம். அவ்வாறு பயன்படுத்தும் அந்த மாவு எவ்வளவு காலம் புதிதாக இருக்கும் என எண்ணி பார்த்ததுண்டா? பெரும்பாலான மக்கள் மாவு பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, பல நாட்கள் மற்றும் மாதங்களாக அலமாரியில் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள், ஆனால் நீங்கள் எப்போதாவது அதன் காலாவதி தேதியை சரிபார்க்கிறீர்களா? மாவை பயன்படுத்துவதற்கு முன் அதனுடைய காலாவதி தேதியை பார்ப்பது அவசியம்.

சமையல் அறையில் மாவினை ஸ்டோர் செய்யும் முறை :

இந்திய வீடுகளில், மாவு மிகவும் அத்தியாவசியமான சமையல் பொருளாகும், இது பெரும்பாலும் மொத்தமாக வாங்கப்படுகிறது. சிலர் மாவை டப்பாக்களில் அடைத்து வைக்கின்றனர். அவ்வாறு டப்பாக்களில் அடைக்கப்படும் உணவுகள் காற்று புகாமல் இருக்கும் வரை சில நாட்கள் கெடாமலும், பூச்சிகள் பிடிக்காமலும் இருக்கும். ஆனால், மாவை துணிப் பையில் வைக்கும் போதோ அல்லது பிளாஸ்டிக் பைகளில் ஓபன் செய்து பின்னர் அப்படியே வைப்பது போன்ற காரணங்களால், மாவின் அசல் சுவை மற்றும் தன்மை கெட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் இது சில சந்தர்ப்பங்களில் நோய் கிருமிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

மாவை எவ்வளவு காலம் புதியதாக வைத்திருக்க முடியும்?

பெரும்பாலான மாவுகள் வணிக ரீதியாக காற்று புகாத பைகள் அல்லது கன்டெய்னர்களில் அடைக்கப்படுகின்றன, மேலும் அவை சரியான நிலையில் சேமிக்கப்படாவிட்டால், பேக்கைத் திறந்த பிறகு 2-3 மாதங்களுக்கு மட்டுமே புதியதாக இருக்கும். எனவே, மாவு புதியதாகவும், பயன்படுத்துவதற்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, மாவை சரியான முறையில் சேமித்து வைப்பது அவசியம். மாவுகளின் தன்மையையும் சுவையையும் தக்க வைத்துக் கொள்ள சில எளிய குறிப்புகள் உள்ளன.

மாவை பத்திரமாக வைக்க வழிமுறைகள் :

மாவு பாக்கெட்டை திறந்த உடனேயே உலர்ந்த மற்றும் காற்று புகாத டப்பாக்கள், கண்ணாடி பாட்டில்களுக்கு மாற்றுவது மாவின் புத்துணர்ச்சியைத் தக்கவைக்க சிறந்த வழி. இதன் மூலம் நீங்கள் பயன்படுத்தும் மாவு 2 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.
சமைப்பதற்கு மாவு எடுக்கும் போது ஈரமான கைகளால் தொடாதவாறு பார்த்துக்கொள்ளவும். அதேப்போல ஈரமான டப்பாக்களில் சேமித்து வைத்தாலும் கெட்டுப்போக வாய்ப்பு அதிகம். டப்பாக்களில் மாவை வைத்தாலும் அந்த டப்பாவைப் உலர்ந்த இடத்தில் வைப்பதும் அவசியம். ஏனென்றால் ஈரப்பதம் பெரும்பாலும் சுவை, மாவின் தன்மை ஆகியவற்றைக் கெடுத்து, நோய் கிருமிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
பாதாம், ஓட்ஸ் மற்றும் திணை போன்ற மாவுகள் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளில் சேமித்து வைத்தால் சுமார் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும், தானியங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து பெறப்படும் மாவுடன் ஒப்பிடும்போது, ​​சுத்திகரிக்கப்பட்ட மாவுகள் மற்றும் அனைத்து நோக்கத்திற்கான மாவுகளும் சிறந்த ஆயுளை கொண்டுள்ளன.
First published:

Tags: Cooking tips, Flour, Kitchen Tips